குமாரசாமி  சிவராஜா (சிவாஜி)

மண்ணில் 29.06.1961 விண்ணில்  09.04.2024 ×××××××××××××××× வடமாட்சி வல்லிபுரம் புலோலியை பிறப்பிடமாகவும்  ஜேர்மனி  (Germany) முன்சன்கிளப்பாக்கை( Mönchengladbach) வசிப்பிடமாகவும் கொண்ட  குமாரசாமி சிவராஜா ( சிவாஜி)    அவர்கள் 09.04.2024 அன்று  காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான   திரு திருமதி குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதியரின்  அன்பு மகனும், திரு திருமதி வினாசித்தம்பி செல்லம்மா தம்பதியரின்  அன்பு மருமகனும்,  விஜேந்திராவின் அன்புக் கணவரும், பாருதாஸ் , புவிதாஸ்சின்  பாசமிகு தந்தையும் , காலஞ்சென்ற தவேந்திரன், (கொழும்பு) லோகேஸ்வரன் (கண்டி) காலஞ்சென்ற கிருஷ்ணதாசன்(கல்முனை), […]

இராசரத்தினம் குலசேகரி

இராசரத்தினம் குலசேகரி அவர்கள் பிறப்பு: 01.01.1949 இறப்பு: 25.01.2024 “எதிரும் புதிரும்” சதீஸ் குமாரன் அவர்களது தாயாரும், சிவகணேசினி அவர்களது மாமியாருமான குலசேகரி அம்மா அவர்கள், 25.01.2024 வியாழனன்று லண்டனில் காலமானார். இறுதிக்கிரியை: 04.02.2024 ஞாயிறு காலை 8 இருந்து 12 மணிவரை. 262, Whitehorse Lane London SE25 6UW தகனக்கிரியை: மதியம் 12.30 மணி South London Crematorium Rowan Road London SW16 5JG இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மகன் […]

கந்தையா யூட் நடேசன்

ஜெயா நடேசன் அவர்களது துணைவனார் அவர்களது 20ம் ஆண்டு நினைவு நாள்..! மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்ற உறவுகளுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, இதய அஞ்சலியினை பகிர்கின்றோம்..! திகதி: 28/01/2024 ஜெயா நடேசன் அவர்கள். Germany

ஜெசிக்கா அல்போன்ஸ்

விண்ணோக்கிச் சென்ற ஆண்டோ பன்னிரென்டு பாதியிலே உன்வாழ்வு போனதேனோ, நோயற்ற உனக்கு வந்த மாயமேது உன்பிரிவை ஏற்க மனம் மறுக்குதே, மகளே நீ மீண்டும் வர மாட்டாயென்று நாமும் தேடி ஒடுங்கியே போனோமே, வாழ்ந்திடும் காலம் எல்லாம் உனைநினைந்து ஒளி முகத்தைக் காணாது தேடுகின்றோம், பெரும் துயரைத் தானமாய்த் தந்தவளே வழிந்தோடும் கண்ணீைரை யார் துடைப்பார், இவ்வுலகில் நாமும் வாழும் வரை எம் இதயத்தில் பொறித்த சின்னமம்மா. அம்மா றாஜினி அல்போன்ஸ் பாடல் வரி : றாஜினி […]

Gowriyamma Selvanayagam

வாழ்வாங்கு வாழ்ந்து இறை நிழலில் இளைப்பாறும் எங்கள் குடும்பத்தின் மூத்த சொத்தாம் பாசத்துக்குரிய மாமி கௌரியம்மா (வயது 89) அவர்களின் ஆத்ம சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்… அன்பு மனைவியாய்த் தாயாய் சகோதரியாய் பேர்த்தியாய்ப் பூட்டியாய் யாவுமாய் நிறைவான வாழ்வினை வாழ்ந்து இறைவன் பாதம் சேர்ந்த இவ்வேளை திங்கள் நடைபெற இருக்கும் இறுதிக் கிரியையிலும் கலந்து கொள்ளுமாறு உறவுகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்…! நன்றியோடு -: குடும்பத்தினர் ராகவன் சிவதர்சினி – Swiss திகதி: 24/11/2023 குடும்பம்

அமரர் ஜேர்மானூஸ் ஜெயந்திரன்

துயர் அறிவித்தல்..! அமரர் ஜேர்மானூஸ் ஜெயந்திரன் அன்ரன் திருச்செல்வம். மலர்வு- 28.05.1958 உதிர்வு- 16.09.2023 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி முன்ஸ்ரர், பிரித்தானியா, வதிவிடமாகவும் கொண்டவர். அன்னார் காலம் சென்ற அன்ரன் திருச்செல்வம், லில்லி மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான யோசெவ் சின்னத்துரை, மேரி திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், மேரி ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், நிலோஜன், ஒக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மெலானி, றொசிற்றா அன்பு மாமனாரும், நிலோ, நியா, மாயாவின் […]

நாராயணன் சந்தானகிருஷ்ணன்

கவித் கவிதாசனின் அம்மப்பா, அபிராமியின் தந்தையார். ஆத்மா நித்திய அமைதி காண, பாமுகம் சொந்தங்கள் இணைந்து பிரார்த்திக்கின்றோம்..! திகதி: 18/06/2023 பாமுகம் கலையகம்.

அமரர் சிவானந்தன் (Selm சிவா)

எங்கள் அன்பிற்குரிய உறவு Selm சிவா அவர்களின் உடலால் மறைந்து 3ம் ஆண்டு நினைவுகளை அவர் துணைவியார், அக்கா சர்வேஸ்வரி கதிரித்தம்பி கூடவே இணைந்து, யாபேருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்..! திகதி: 26/05/2023 பாமுகம் கலையகம்

சுப்பையா அன்னப்பிள்ளை அம்மா

அபிஷன் கணேசநாதனின் அப்பம்மா. அன்னப்பிள்ளை அம்மாவின் நீண்ட ஆயுள் அமைதி காணட்டும். உற்ற உறவுகள் ஆறுதல் அடையட்டும்..! திகதி: 21/03/2023 பாமுகம் / அபிஷன் குடும்பம் UK.