Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.12.2024 கவி இலக்கம்-290 “இதயம்” ——————- இதயம் ஒரு கோயில் அது லப் லப் அடிக்கும் சுப நேரம் நாள் முழுதும் அடிக்கும் கடும் சத்தம் இடது பக்க தொழிலின் உச்சம் நாலு அறைகள் அமைந்த சதுக்கம் எதையும் தாங்கும் பாதுகாப்பு பொக்கிஷம் சுருங்கி விரிந்து இதய ஓட்ட ஆட்டம் இரத்தோட்டம் ஓடி ஓடி ஓயாது ஓட்டம் கொழுப்பை கண்டவுடன் வால்களில் அடைத்து காட்டம் மக்களுக்கு நெஞ்சு வலி கொடுத்து தேட்டம் பக்க […]

ராணி சம்பந்தர்

17.12.24 ஆக்கம் 171 இதயம் காதலின் பிறப்பிடம் மோதலின் முறைப்பிடம் சாதலின் நிரப்பிடம் இன்ப துன்ப சேர்தலில் தரிப்பிடம் அது எதுவோ உடலிது காவிடும் உயிரின் துடிப்பிடம் கல்லுப் பிள்ளையார் போலில்லாது அல்லும் பகலும் ஓய்வின்றியே டொக், டொக்கெனத் திக்கு முக்காடி விழித்திடும் இதயம் அன்பு, கருணை, உணர்வின் வசிப்பிடமே கொதி, கோபம் சுமக்கும் பொறுமை கருவிடமே பிரிய மனமிலாது உயிர் ஊசலாடும் தறுவாயிலும் ஆடி அடங்கித் துடியாய்த் துடித்திடும் துணிவான இருதய இதயம். ராணி சம்பந்தர் […]

செல்வி நித்தியானந்தன்

இதயம் மனித உயிரினத்தின் முதன்மை உன்ஆட்டம் மார்பிடைப் பகுதியில் இரட்டை சவ்வில் இருப்பாட்டம் குற்றாள அருவியிபோலே குருதியில் குளிப்பாட்டம் குந்தியே இருந்தாலும் குணத்தில் சிறப்பாட்டம் இருவேறாய் பகுப்பில் பிரிப்பாட்டம் இருந்தாலும் இடப்பக்கம் உறுதியாட்டம் ஈர்இரண்டு அறையில் பணியாட்டம் இறுதிவரை உந்தனுக்கு நன்றிசொல்லியே. செல்வி நித்தியானந்தன்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 290 17/12/2024 செவ்வாய் இதயம் ———— இடது பக்க நெஞ்சினிலே, இரும்புக் கூட்டின் நடுவினிலே இதயம் என்ற பெயரினுடனே! இருப்பாய் வேலைப் பழுவுடனே! நான்கு அறைகொள் தாயகமே! நமக்கு நீயென்றும் நாயகமே! கூம்பு வடிவு அமைப்பகமே! குருதி தாங்கிடும் குதவகமே! இடதும் வலதும் தொடர்பில்லா, இயற்கை அமைப்பு உனதன்றோ! நல்லது கெட்டது கலக்காது-நம் அவன் செய்த அமைப்பன்றோ! உள்ளக வாசல் இரண்டுடனே, உனக்கு வாசல்கள் ஆறுண்டாம்! நல்லதும் கெட்டதும் காவிடவே, நாடியும், […]

சிவரூபன் சர்வேஸ்வரி

இதயம் ஃஃஃஃஃஃ இதயமே என் இதயமே எங்கே போகின்றாய் // இகமதில் என் எண்ணங்களே எங்கே போகின்றாய் // மனசுக்குள் மத்தாப்பூ விரிந்து பூக்குமே // மெளனமே நீயுமோ என்னைக் கொல்கின்றாய் // சிரிப்பதும் அழுவதும் உன்னெஞ்சும் அல்லவா // ஆற்றிட வேண்டுமே அறிவால் நீயென்றும் // மாற்றியும் வைக்கின்றார் இதயம் பார்புள்ள // மறந்துமே கவலையை தூக்கியெறி புள்ள // நினைப்பதும் மறப்பதும் இதயம் தான்புள்ள // ஈனத்தை மறந்துநீ இயல்பாய் எழும்புவாய் // பூட்டிய […]

ஜெயம் தங்கராஜா

சசிச இதயம் எதையும் தாங்கும் இதயம் எனக்கு சிதையும் என்று போடாதே தப்புக்கணக்கு பின்னால் இருந்து துரோகஞ்செய்யும் கோழையே முன்னால் வந்தால் ஒட்டநறுக்குவேன் வாலையே நண்பனென நினைத்து பழகியதெல்லாம் பாவம் உண்மையில்லா சொந்தமென கிடைத்திட்ட சாபம் புண்பட மனதினை வைப்பதிலென்ன இலாபம் அன்பை எதிர்பார்த்து அடைந்துகொண்டேன் சோகம் முதுகில் குத்தாதே முகத்தில் அறைந்துவிடு பதுங்கியிருந்து பழி தீர்ப்பதை மறந்துவிடு நிசமென நினைத்தேன் போலியான உன்னை விசங்கொண்ட பாம்பாகி தீண்டுவதேன் என்னை கரும்பாக இனித்தது ஏன்தான் கசந்ததோ விரும்பியுண்ட […]

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 290 இதயம் வேண்டாதது வந்தது வேண்டியது நின்றது தொடரும் வாழ்வில் முடிவு தந்தது இதய துடிப்பில் தொடரும் வாழ்வு துடிப்பின் ஒய்வில் முடியும் ஒய்வு அடிப்பின் சத்தம் குறையும் போது எதனைக் கொண்டு கூட்ட முடியும்? அறிந்த போது அலறிக் கேட்டோம் அடங்கும் வாழ்வை தொடர வை இறைவா! இதய சத்த சுருக்கல் முடல் இயங்கும் வரை தான் வாழ்வின் ஓட்டம் இதயம் ஆள எவனால் முடியும் அவன் அவன் வாழ்வு அடித்தே! […]

கமலா ஜெயபாலன்

ஈரம் மனமும் ஈரமானால் உலகில் மகழ்ந்திடும் உயிரினங்கள் தனம் படைத்தவன் வாழ்வில் தர்மம் கிடையது மனம் கொண்டவன் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறையேது இன்பமும் துன்பமும் என்றும் இருப்பது இயற்கை காலத்தின் கோலம் இன்று கனமழைப் பொழிவு ஞாலத்தில் எங்கும் ஓடிடும் வெள்ளப் பெருக்கு பாலங்கள் உடைந்து எங்கும் பாதைகள் அழிவு வேலவன் அருளும் இதில் வேறாய்ப் போச்சு ஈரம் இல்லையேல் எதவும் இங்கில்லை என்பர் வீரம் மேச வெதரும் சரியில்லை வானும் பாய்ந்து வயல்கள் அழியுது வயல்காரன் […]

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்@ ஈரம் ***** மொழிதனில் இருந்தது தாகம் வழிவழி வந்தது மோகம் விழிதனை நிறைக்குது ஈரம்! நஞ்சினை உண்டவர் வீரம் நெஞ்சினை நிறைக்குது பாரம் அஞ்சன விழிகளில் ஈரம்! விண்தனில் இருந்து வீழ்ந்தது மண்தனில் ஓடி வழிந்தது திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது எண்ணங்கள் இன்னமும் ஈரம்! தாய்நாடு வெகு தூரம் வாய்தனில் ஊறுது காரம் விழிதனை நிறைக்குது ஈரம்! மண்தனை இழந்தது பாரம் கண்களால் கண்டது கோரம் எண்ணங்கள் காயாத ஈரம்! நன்றி வணக்கம்!

சக்தி ஶ்ரீநிசன்கர்

வணக்கம்@ ஈரம் ***** மொழிதனில் இருந்தது தாகம் வழிவழி வந்தது மோகம் விழிதனை நிறைக்குது ஈரம்! நஞ்சினை உண்டவர் வீரம் நெஞ்சினை நிறைக்குது பாரம் அஞ்சன விழிகளில் ஈரம்! விண்தனில் இருந்து வீழ்ந்தது மண்தனில் ஓடி வழிந்தது திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது எண்ணங்கள் இன்னமும் ஈரம்! தாய்நாடு வெகு தூரம் வாய்தனில் ஊறுது காரம் விழிதனை நிறைக்குது ஈரம்! மண்தனை இழந்தது பாரம் கண்களால் கண்டது கோரம் எண்ணங்கள் காயாத ஈரம்! நன்றி வணக்கம்!