அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்—258 தலைப்பு: மாறுமோ மோகம் …………….. தேர்தலில் விவசாயி சின்னம் தீர்ப்பு வருமா? என்று – நாம் தமிழர்க்கு மாறுமோ மோகம்! ஈழ விடுதலை மலர வேண்டுமென்று புலம் பெயர் தமிழர்க்கு மாறுமோ மோகம்! ஈன்ற தன்மகனைச் சான்றோன் ஆக்க வேண்டுமென்று தாய்க்கு மாறுமோ மோகம்! மனம் கவர்ந்த காதலனை அடைய வேண்டுமென்று காதலிக்கு மாறுமோ மோகம்! காதல் வலை வீசி கவிதை மொழிபேசி வஞ்சியரை ஏமாற்றுவதில் – சில வஞ்சகர்க்கு மாறுமோ […]

கீத்தா பரமானந்தன்

மாறுமோ மோகம்! தீராத ஆசைகளால் திரள்கின்ற ரோகம் திசையின்றி அலைகின்ற மந்தைகளாய் ஆட்டம்! ஆறாத ரணத்தோடு அறிஞ்சர்கள். கூட்டம்! கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் பண்பாடு கலாசாரம் பார்த்தறியா விழாக்கள் பணம்படுத்தும் பாடாய்ப் பரவுகின்ற வேகம் மாறுமோ இம் மோகம்? வன்முறை அழிவுகள் வாழ்வெட்டுக் கூட்டங்கள் பொல்லாத போதையில் போக்கற்று இளையோர்கள் பிஞ்சுகளை அழிக்கும் கஞ்சாவின் மயக்கம் மாறுமோ மோகம்! நாகரிகப் பாதை நவயுக அலங்காரம் வறுமைக் கிழிசலின்றி வனப்புக் கிழிசலுடன் வளையவரும் வாழ்க்கை கனக்குறது மனது […]

சிவா சிவதர்சன்

வாரம் 258 ” மாறுமோ மோகம்” நூறுநாள்ஓதி ஆறுநாள்விட தீருமாம்கல்வி எனும்ஞானம் நாளில்பிறந்து நாட்பலசென்றாலும் தீருவதில்லை இந்தமோகம் ஆசைகொண்ட பொருளைகைப்பற்ற நாடிச்செல்லும் வேகம் அடைந்தாலும் தீராது எந்நாளுமிந்த மோகம் ஆசைக்கும் அளவுண்டு ஆயுளுமுண்டு பேராசைக்கு அளவு,ஆயுள் எனும் எல்லையேது ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் வள்ளுவரும் சொல்லிவைத்தார் அன்றே வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை என்றே மேலும் மேலும் வளரும் ஆசையின் எல்லை அவா இன்றேல் தவா இல்லை என்பதே உண்மை பருவத்தில் வசந்தம்போல் மனிதவாழ்வில் இளமை […]

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_142 “மாறுமோ மோகம்” வெளிநாட்டு மோகம் வந்த பின் தாகம் பட்டு திரியும் துன்பம் படும் அவலம் வேலை தேடும் அவலம் வேதனையில் மக்கள்! அரசாங்க ஊழியராக இலங்கையில் இருந்தினம் இலங்கையில் வாழ முடியாதாம் திருமணம் செய்ய பெண்ணும் கொடுக்கினம் இல்லையாம் காரணம் என்னவென்று கேட்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையை தான் பொட்டையள் கட்டுவாளவையாம் ஒன்றும் செய்ய முடியாமல் பொடியள் எல்லாம் கிளம்பி கொண்டு இருக்குதுகள் வெளிநாட்டு மோகத்தில்! பன்னிரண்டு மணிநேர வேலையாம் சம்பளமும் போதாதாம் […]

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு —— மாறுமோ மோகம் —————— முன்பொரு காலம் வெளிநாட்டு மோகம் பின்பொரு காலம் உள்நாட்டு மோகம் புலம்பெயர்ந்த மக்களுக்கு புளித்துவிட்டது இந்தவாழ்க்கை மயக்கம் தெளிந்து மாயை விலகி தேடுகிறார் மண்வாழ்வை மூத்தோருக்கு அன்பில் மோகம் இளசுகளுக்கு உடையில் மோகம் குழந்தைகளுக்கு பெற்றாரில் மோகம் காதலனுக்கு காதலியின்மேல் மோகம் மோகம் கொண்டவர் மேகம் போலசைவார் தாகம் கொண்டவர் தண்ணீர் தேடியலைவார் வேகம் கொண்டவர் விண்ணோக்கி ஓடுகிறார் போகத்திற்காய் வயலை உழவர் உழுகிறார் கிளியோபற்றாவில் ஏற்பட்ட […]

Vajeetha Mohamed

மாறுமோ மோகம் தானம் கொடுக்கும் வள்ளல்கள் வடிந்து ஒழுகும் சிதறல்கள் வான் விட்டு பூமிவ௫ம் மோகம் துகில் நனைந்து துளிர்கின்ற தாகம் மாறுமா மோகம் வீறுகொண்ட வெறியோடு வீதியிலே சிரழித்து காமத்தின் மோகத்தோடு மூச்சீறுக்கி ௨யிரெடுக்கும் கயவர்களின் மாறுமோ மோகம் ௨யிரோட்டமுள்ள வாழ்க்கை ௨றக்கம் தொலைத்த வேட்கை மனிதனுக்குள்ளே மனிதம் ஒளித்து விழியி௫ந்தும் கு௫டாகி அழிந்து அலைந்து வாழ்வு மாறுமோ மோகம் மாயைக்குள்ளே வயிற்றெரி்ச்சலை கட்டி மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி துள்ளித்திரியும் எண்ணங்கள் துயிலாமல் சுற்றும் வண்ணங்கள் […]

ஜெயம் தங்கராஜா

சசிச மாறுமோ மோகம் மனதில் ஒலித்திடும் தீய ஓசை குணத்தை அழித்திடும் அதீத ஆசை மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி பேயாக ஆட்டம்போட்டு கண்டிடுமே வளர்ச்சி பற்று என்பது விருப்பத்தின் வெளிப்பாடு சற்று அதிகமானால் அதுவே குறைபாடு சிலப்பதிகாரத்தில் கோவலனும் வேட்கையின் வேகத்தால் பலரின் வாழ்க்கை சரிந்ததுவும் மோகத்தால் பற்பல மோகங்கள் மனிதர்களைக் கவரும் பற்றை தாண்டிப்போய் வெறியாகிவிடார் சிலரும் எத்தனை மோகங்கள் என்னென்ன வடிவில் அத்தனையும் ஆட்டிவிட்டே வெளியேறும் முடிவில் பெண்மீது கொண்டோர்கள் முடிந்திட்ட கதையும் மண்மீது கொண்டோர் […]

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.03.2024 கவிதை இலக்கம்-258 மாறுமோ மோகம் ——————– மாற்றம் ஒன்றே மாறாதது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தருணத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன சில வேகமாக மாறும் சில மெதுவாக மாறும் சில தலை கீழாக மாறக்கூடியவை இரவு பகலாகிறது பகல் இரவாகிறது கோடை போய் குளிர் வருகிறது மீண்டும் குளிர் அகற்றி கோடை அரங்காளுகிறது பூ காயாகி கனியாகிய பின் கனி செடியாகி கனி செடியாகி பூப்பூக்க புது வழி தருகிறது மாறுமோ தினம் […]

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24 கவி இலக்கம் -139 மாறுமோ மோகம் மாறுமோ மனங்களின் மோகம் தேறுமோ இனங்களின் தாகம் ஆறுமோ குதர்க்க சோகம் சாறு பிழிய சேறு பூசும் வேகம் நாளும் பொழுதும் நோகடிக்க வாழ்வும் சாவும் மூழ்கடிக்க மாளும் பொழுது கல்லறை கண் திறந்து பேசிடுமா ? பச்சைப் பாலரும் இச்சைக்கு இணங்காத மங்கையரும் செய்த பாவம் என்ன ? பதில் தான் கூறிடுமா ? மூச்சை நெரிக்கும் ஒரு நொடியின் காமுகர் போதை பாதையில் மாறுமா மோகம் […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 258 26/03/2024 செவ்வாய் “மாறாதோ மோகம்।!” ——————————- வாழ்வினில் வந்திடும் மோகம், வளர்த்திடில் தந்திடும் சோகம்! ஆக்கையில் அதனது தாக்கம், அளவிட முடியாமற் போகும்! உணவில் உண்டாகும் மோகம், உணர்த்திடும் உடல்நிறை ஏற்றம்! பணமதில் அளவில்லா நாட்டம்! பலப்பல செயல்செயத் தூண்டும்! பதவியாம் பேயதன் மோகம், புரிந்திடும் பற்பல துரோகம்! உதவியைத் தூற்றிடத் தூண்டும்! உட்பகை எல்லையைத் தாண்டும்! போதை மருந்தின் மோகம், புரிந்திடும் தினமது நாசம்! வாதை தருவதில் மோசம்! […]