எல்லாளன்
சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம் இனிய அன்பு பதியம் தனக்கு வரும் நலதை தரும் எனக்கு நிதமும். இணையான அவட்கு இதமான அணைப்பு மண நாளின் முதலாய் மனம் தருமே தொடராய். மனையிலுள்ள பணிகள் மலர முகம் புரிவாள் நினைவில் தன் கனவில் நிறுத்தி மகன் மகளை குடும்பம் தன் உயிராய் குறி வாழ்வில் நெறியாய் உருகும் அவள் இதயம் உள்ளங்களை கவரும். இந்த அவள் இயல்பே எனை கவர்ந்த நிலையே வந்தமர்ந்த காதல் […]
வசந்தா ஜெகதீசன்
இதயம்… பேசாப் பொருளே பெரு வாழ்வின் பொக்கிசமே ஒய்வற்ற உன் துடிப்பில் ஒடிடும் வாழ்வின் வரம் அசைவற்றுப் போனாலே உயிரற்ற உடலாவோம் உனக்குள் உறைந்துள்ள உதிரமே- பேராற்றல் உடல் நலத்தின் காப்பகமே உயிர் வாழ்வின் பெட்டகமே எதையுமே எதிர்கொண்டு எதிர்நீச்சல் தாடகமாய் உள்ளுக்குள் உறவாடும் உன்போல உறவேது ஈர்ப்பின் வலுவேது! நன்றி மிக்க நன்றி
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு “மார்கழி” (விருப்பு தலைப்பு) மதிநிறை மாதமாம் நன்னிறை மார்கழி பிறந்தது இனிதாக மகிழ்வுடன் அருள்நிறை கொண்டே மாதமிது தவழ்ந்தது இந்நாள் அகவையை உருட்டிடும் மாதங்கள் அகிலத்தில் பன்னிரெண்டு காண்கிறோம் அவற்றுள் விஷேசமான மார்கழி அதனுள் எத்தனையோ மகிமைகள் அகிலாண்டேஸ்வரரின் அற்புத ஆருத்திர தரிசனம் திருவாதிரையில் அருள்நிறை பெருமாளின் திருநாள் அற்புத வைகுண்ட ஏகாதேசியன்றோ ? சிவனுக்கு திருவெம்பாவை திருபள்ளியெழுச்சி சிங்கார விஷ்ணுவுக்கு திருப்பாவையென திருபலநிறைந்த மங்கலமான மார்கழி தித்திக்கும் வகையில் பிறந்ததின்று மானிடர் […]
ஔவை
இதயம் ======= அன்பின் வடிவாய் அகிலத்தில் நீயே இன்ப ஊற்றின் இடமும் நீயே துன்ப வலியின் துடிப்பும் நீயே அன்றாட இயக்கம் அனைத்தும் நீயே காதலின் சின்னமாய்க் காட்சியில் நீயே சாதலின் முடிவில் சான்றும் நீயே ஈதலும் இதயம் இளகினால் தானே நீதரும் இடமே நிரந்தரம் அன்றோ உணர்வை உணரும் உறுப்பும் நீயே குணத்தைக் காட்டும் கருவியும் நீயே முகத்தில் ஒளியாய் மலர்வதும் நீயே அகத்தில் இருந்து ஆள்வதும் நீயே உயிரின் மூலமும் உனது துடிப்பே உயிர்கள் […]
கீத்தா பரமானந்தன்
இதயம்! என்னை யியக்கும் மின்னிசையே எழிலாய்த் தொடரும் தனியுறவே பொன்னை விஞ்சும் பெருந்தனமே பொதித்து நிற்பா யாயுளையே சின்ன வுருவாம் சித்திரமே சிந்தை யுன்றன் கைவசமே! முன்னை யுதித்த முத்தெனவே முழுதாய்த் தொடர்வாய் பத்திரமாய்! விருப்பும் வெறுப்பும் சுமந்திருந்தே வீழ்த லெழுதல் வகுக்கின்றாய் அரும்பு மாசைக் கடலெனவே ஆட்டி வைத்துச் சிரிக்கின்றாய் கரும்பாம் காதல் கோட்டையெனக் கனிந்த காட்சி யானவளே! வருந்தாப் பாதை தந்துநின்றே வனப்பைத் தருவா யென்றனுக்கே! இல்லை மேன்மை யுனக்கிணையாய் இதய மென்னும் பெட்டகமே! […]
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் _173 “இதயம்” இதயமே என் இதயமே எம்மை இயங்க வைக்கும் இதயமே முச்சுக்கு நீயே முன்னுரை பேச்சுக்கு நீயே பெருந்தகை! ஒரு நிமிடம் நீ துடிக்க மறுத்தால் நான் இல்லை உனை நான் கவனிக்க மறுத்தால் நீ இல்லை! உன் சேவை பெரும் சேவை பெருமிதம் கொள்கிறேன் பேர் அன்புடன்! இதயத்தின் வழியாக இரத்த ஓட்டத்தை ஓழுங்கு படுத்தி இதய வால்புக்கு முக்கிய பங்கு இங்கு! உணவை மருந்தாக்கு உடல் பயிற்சியை விருந்தாக்கு […]
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு இதயம் ———- இதயம் யாரிடம் இருக்கிறது இன்றுலகில் இதயமற்ற செயலால் எத்தனை எத்தனை கொடுமைகள் அத்தனையும் நல்ல இதயமற்ற செயலே இதயம் சுத்தமாக இருக்க வேண்டும் உடம்பில் நோய் வராது சித்தரின் வாக்கு இதய வால்வுகளில் கொழுப்பு படிந்தால் அடைப்பு ஏற்படும் இதயத்திற்கு செல்லும் குருதியின் நிலைப்பாட்டில் இடர்ஏற்படும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ஒட்சிசனும் காணாது இருக்கும் மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும் அதனால் நிறைய பிரச்சனைகள் உடம்பில் ஏற்படும் இதுவே […]
சிவா சிவதர்சன்
[ வாரம் 290 ] “இதயம்” இதயமே இல்லாத மனிதர்வாழும் இவ்வுலகில் என்னையேன் படைத்தாய் என்னிறைவா? இதயத்துடிப்பு நின்றால் பிணமென்று வைத்தியமும் சிவனுக்கே இதயம் நின்றால் சவமென்று மக்களும்நம்புவர் இதயமின்றி எப்படி மனிதர் வாழுதல் சாத்தியம்? மூளையில் எழும் மனஎழுச்சிகளின் ஓட்டமே காரணம் உணவு உடைக்கு பணம் செலுத்துதல் நியாயம் இலவச வளி, நீருக்குப்பணம்கொடுத்தல் அநியாயம் அப்பாவிகள் மீது திணிக்கப்படும் உன் சோதனைகள் இறைவா நீயும் இதயமற்றவன் எனக்காட்டும் ஆதாரங்கள் மாந்தரில் பணம் படைத்தவர் என வர்க்கங்கள் […]
மனோகரி ஜெகதீஸ்வரன்
இதயம் சாதலைத் தடுக்கும் இயந்திரம் காதலை உணர்த்தும் சூத்திரம் மார்புக்கூட்டுக்குள் மறைந்திருந்து காக்கும் பாத்திரம் அதுவே இதயம் அறிவோம் நாமே இதயம் சுருங்கி விரிந்தாலே சுற்றியோடிக் குருதி விரும்பிக் கழிவகற்றி ஊட்டமிட்டுக் காக்கும் உடலை விரைதோடி எங்கும் பரவி இரவுபகல் இதயச் சேவை இல்லாது போயின் உறவறுத்துப் பறக்கும் உயிர் ஊர மறுத்துக் கிடக்குமுடல் நகர வேண்டுமா உடல் நன்றாய் பேணு இதயத்தை நுகர வேண்டுமா வசந்தத்தை நுடக்கம் அண்டாது பேணு இதயத்தை சுவர்க்கம் சுவற வேண்டுமா […]
வஜிதா முஹம்மட்
இதயம் எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன இ௫த்தி வைத்தவர் யா௫ எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து ௨சிப்பிச் செல்லும் தேர்[௫] ௨டல் தொட்டிலிலே மறைந்து ௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து நாலு அறை வீட்டுக்குள்ளே நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி நீ குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி நீ ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ ஆனந்த காதலின் விதையல் நீீ ஓய்வின்றி பணி செய்கின்றார் ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார் நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு ௨ம் […]