மனோகரி ஜெகதீஸ்வரன்

வேள்வி விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி அதையிதை அடியிட்டுக் காட்டி தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன் வாளுயர்தாதே விரும்பிக் கேளும் அக்கினி வேள்வியே சிவ வேள்வி அதனை ஆற்றுவர் அவிப்பொருள் தூவி மந்திரங்களைச் சிதைக்காது சித்தத்தால் கூவி எழும்பும் புகைக்குப் பலியாகும் கிருமிகள் அழும் மனமும் குணமாகி சுனையாகும் அண்டிய பகுதிகளும் நஞ்சை விலக்கும் புண்ணியச் செயல்கள் புலத்தில் நிறையும் எண்ணிய எண்ணங்கள் இயல்பாய் நடக்கும் அறிவியலும் நிறுவுகின்றது வேள்விப் பயனை கேலிக்குரியதாய் ஆக்காதீர் வேள்விக் […]

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_149 “வேள்வி” உடல் உயிர் உன்னதமாக மண்ணுக்கு மக்களுக்கு விதையிட்டு உரமிட்ட மாவீரர் அர்பணிப்பு! ரத்த அருவியில் வீரர்கள் குளித்து யாகம் தொடங்கி வேள்வி நடந்தது! வீரர்கள் சூழ்ந்து காவலில் நின்று யாக வேங்கைகள் மூட்டிய வேள்வியில் ஆயிரம் வீரர்கள் போயினர்!! பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் இனத்திற்கு இரையாகி இரத்த கறையில் கரைந்த காவிய வேள்வி கண்கலங்கிய விழிகள்! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.05.2024 கவி இலக்கம்-267 “வேள்வி” —————— வேள்வியில் வீழ்வது வீரமும் புகழும் வேள்வியில் நேர்த்தியில் கிடாய் பலியாகும் மண்ணை காக்க மாவீர்ர் வேள்வியில் அழிவாகும் விடுதலை வேள்வியில் தொலைந்தவர் பலராம் சுற்றி இருந்து பிராமணர்கள் வேள்வி அதி பெரும் பலமானது சமூகத்தார் தீ எரித்து மிதித்து நேர்த்தியை முடித்து வேள்விகள் முடித்து கொள்வது விந்தை வளரும் வேள்வி ஓங்கி உயரும் ஜெயா நடேசன் ஜேர்மனி

Selvi Nithianandan

வேள்வி பாரினில் வேள்வி பலமாய் என்று பலியாக்கி உண்ணும் பலரும். உண்டு பாவம் புண்ணியம் எங்கும் முண்டு படைத்தவன் படைப்பும் உயர்வு வென்று விடுதலை வேள்வியில் நினைவின் இழப்பு வீரர்கள் ஆத்மார்த்த வேங்கையாய் இறப்பு வீரமே மண்ணின் மேலான சிறப்பு வியூகமும்வேங்கையாய் விதையான பொறுப்பு உலகிலே யாகமாய் பேரிழப்பு உயிரையே மதிப்பதே கணிப்பு உதிரமும் வெள்ளமாய் கிடப்பு உய்து உணர்தலே உளமது சிறப்பே செல்வி நித்தியானந்தன்

சர்வேஸ்வரி சிவரூபன்

வேள்ளி ^^^^^^^^^^^ அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே அமைதியாய் வேள்விகள் […]

வசந்தா ஜெகதீசன்

வேள்வி… ஆரியர் வருகையே அடித்தளம் அனுதினம் வாழ்விலே இடர்தரும் வேள்வியின் சங்கமம் வீண்விரயம் விதைபடும் உயிர்க்கொடை பேரிழப்பு ஒப்புவமை அற்ற உயிரிழப்பு மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு உயிர்வதை உலகிலே மா தடுப்பு உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு. நன்றி மிக்க நன்றி

பாலதேவகஜன்

வேள்வி அஞ்சி அஞ்சி வாழ்ந்திடவா ஆண்டவா! எமைப் படைத்தாய் ஆதிக்குடி நாங்களென்ற அடையாளம் ஏன் அழித்தாய். வலிந்து வலிந்து இழுக்கின்றான் நலிந்தவர்கள் நாமென்று அடங்கி இனியும் வாழ்வதா? அச்சம் தவிர்த்து எழுவதா? என்ற எங்கள் கேள்விக்கு விடையாய் எழுந்தான் விடுதலை புலியாய் மலர்ந்தான் விடுதலை வேள்விக்கு தயாரானான். எங்கள் அண்ணன் எதிலும் விண்ணன் எதிரிகள் குலைநடுங்க எழுந்தான் மன்னன். விடுதலை வேள்வித் தீ! விசாலமாய் எரிய ஆகுதியாய் தங்கள் உயிர்களையே தரத்துணிந்தார்கள் ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள். அண்ணன் […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 267 28/05/2024 செவ்வாய் வேள்வி ———— உயிரை எடுப்பதும் வேள்வி! உணர்வை அழிப்பதும் வேள்வி! பயிரைக் கெடுப்பதும் வேள்வி! பாரினில் எங்கில்லை வேள்வி! இயற்கை செய்திடும் அனர்த்தம், இதனால் வரும்மன அழுத்தம்! செயற்கையில் வந்திடும் அழிவு, சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு! உயர்ந்து வந்திட்ட பேரலைகள்! ஊரினுள் சென்ற சில நொடிகள்! கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்! காலம் மறந்திடாப் பெரு வலிகள்! அறுபதில் இருந்து கண்ட பேறு! அங்கே ஓடுது நம்குருதி […]

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 267 வேள்வி வேள்வியானீர் நீரே எமக்காய் வேள்வியானீர் நீரே எமக்காய் நம் பாவங்களை சுமந்து வேள்வியானீர் நீரே பழியாடைய் எமக்காய் வேள்வியானீர் நீரே மாற்ற்ங்கள் மனதில் தோன்ற மரணீத்தீரே புது வழி புது பழி உம்மைக் கொடுத்து வேள்வியானீர் நீரே கண்ணீர் விட்டு கசையடி பட்டு கலங்கியும் மாய்ந்து வேள்வியானீரே யேசு ஐயா! நன்றி தோத்திரம் உனக்காய் நாட்கள் எல்லாம் கூறுவோம் உமக்காய். ! க.குமரன்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 267வாரம் காலம்: 28/5/24 செவ் 7.45 தலைப்பு: “வேள்வி” எழுதுக.இணைக.