Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து நாளும் விரைவெனச் சென்று நாடுகளிடை யுத்தமாய் அழிவும் நாசமாய் இவ்வாண்டு செல்லவே நானிலமெங்கும் பகைமைகள் மறந்து நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட நான்முகன் என்றுமே காத்திடவே நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

வஜிதா முஹம்மட்

பூக்கும் புத்தாண்டு 12 மாதத்தின் கூடு பதியமாகித் தேயும் ஏடு வந்து விழும் வாழ்த்து வரிசைப்படும் திட்டங்கள் கோர்த்து புதுப் பொழிவோடு வ௫வாய் புதுமைகள் எடுப்பாய் த௫வாய் சுடர் மிகு வாழ்வு வ௫மா சூது வாதில்லா நிலை த௫மா இறந்த காலப் படிமங்கள் ௨க்கிப் போன பகைமைகள் அகன்று போகா சாதி மத பேதங்கள் அழிந்து மறையா நீதி நெறி முறைமைகள் பாதை வகுக்குமா பூக்கும் புத்தாண்டு பழமை கழிக்குமா விடியும் இவ்வாண்டு வார்த்தைகள் தேடும் கடதாசி […]

ஜெயம் தங்கராஜா

சசிச தேவமைந்தன் அவதரிக்கப்போகின்றார் இது ஆண்டவர் அவனிக்கு வருகின்ற காலம் அதனால் பூண்டது பூமியும் மகிழ்ச்சியின் கோலம் மண்ணகத்தை மீட்க விண்ணகத்து இறைவன் வருவாரே தன்னையே கொடுத்து மானிடர் வாழ்க்கையை மீட்பாரே ஏழையெளியவர் வாழ்வினில் இனி சந்தோசம் பிறக்கும் வாழ வழியற்றோர் நாட்கள் இவராலே சிறக்கும் எளியவரைப்பார்த்து எள்ளிநகையாடியோரும் மனந்திருந்துவார் இவரைப்பார்த்து இழிவாக்கப்பட்டோரையும் உறவாக்குவார் கை கோர்த்து மனிதநேயம் உலகில் ஓங்கவைக்கும் உன்னதர் வருகின்றார் பிணிகள் நீங்கும் அருளினை பொழிந்திட வருகின்றார் சாந்தியற்ற குவலயத்தில் சமாதான தூதராக […]

மனோகரி ஜெகதீஸ்வரன்

பூத்திடுவாய் புத்தாண்டே அகம்புகுந்தறம் அன்பினைத் தூவ முகமெங்கும் புன்னகை பரவ பகடுதுரித்த வாழ்வினை வாழ இகமெங்கும் சாபயம் அகல தடையிடுவார் சங்கதிகள் சிறுக்க படையகன்று நிலமது கிடைக்க முடைகழன்று மூர்கமும் அகல தடையொடுங்கிச் சகலதும் நிறைய நடைநிமிர்ந்து நிலமதில் உலவ பூத்திடுவாய் புத்தாண்டே மனோகரி ஜெகதீஸ்வரன்

சிவரூபன் சர்வேஸ்வரி

பூக்கும் புத்தாண்டு ஃஃஃஃஃஃஃஃஃஃஃ பூக்கும் புத்தாண்டு பொலிவுடன் வருக // காக்கும் நிலையிலே கருணையுடன் மிளிர்க // நோக்கும் போதிலே பிணிகளும் ஒழிக // தேங்கட்டும் செல்வம் செழிப்பாய் நின்றே // பொங்கட்டும் புதுமைகள் பேரொளியும் போன்றே // தஞ்சம் என்றே உன்னையே நம்பவே // கஞ்சமகளாய் சிரித்துமே வருவாய் எழில்பூத்தே // வண்ணமகளே வாடாத ரோஜாவே வாடியம்மா // தேடாத திரவியமே தங்கமகளே தைமகளே // உன்வரவும் என்னாளும் உலகமும் உய்யவே // உயர்வே உகந்ததே […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 291 07/01/2025 செவ்வாய் பூக்கட்டும் புத்தாண்டு! ——————————— மெல்ல விலகுது பழையது! மெதுவாய் நுழையுது புதியது! அல்லல் துன்பமும் அகலுமா! அடுத்த புத்தாண்டு சிறக்குமா! இருபத்து நான்கில் இனித்தது,, இதயம் முழுவதும் நிறைத்தது.. இருபத் தைந்திலும் இருக்குமா! இன்பம் நிறைவாய் கிடைக்குமா! மத்திய கிழக்கு வெளிக்குமா! மகிழ்வு தந்திடப் பிறக்குமா! சத்தியம் நேர்மை ஜெயிக்குமா! சகலதும் நன்மையில் முடியுமா! சரித்திர மாற்றம் நிலைக்குமா! சரியாய் தொடர்நடை போடுமா! நரித்தனம் மீண்டும் நுழையுமா! […]

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.12.2024 கவி இலக்கம்-291 “பூக்கும் புத்தாண்டு” —————- பூக்கும் புத்தாண்டே வருக புதுப் பொலிவுடன் கொண்டு வருக பூமியில் மலர்ந்த புன்னகையுடன் வருக இன்ப துன்பங்கள் சமாதானமாய் கொடுக்க வருக நிம்மதி தேடும் மாந்தர்க்கு அமைதியை தந்திட வருக புலர்கின்ற பொழுதெலாம் பூபாளம் இசைத்திட வருக அகத்தினில் அழுக்குகள் நீக்கி அருள் விளக்கேற்றி ஆனந்தம் கொண்டு வருக இயற்கை அனத்தங்கள் இனி இல்லையென சொல்லி விட வருக விடியலின் மடியில் வாழ்வு சிறந்திட […]

க.குமரன்

சந்தம சிந்தும் வாரம் 291 பூக்கும் புத்தாண்டு சென்றவை சென்றவையாக வருபவை வந்தவையாக வரவேற்று மகிழ்ந்திடுவோம் ! நடப்பவை நன்மைகே நடைதனை காலத்துடன் கரம் கோத்து காவலன் காப்பவனுடன் நாற்றிடும் நம்பிக்கை நாற்றுடன் நல்ல அறுவடை பெறுவோம் என நகர்ந்திடுவோம் தென்றல் காற்றுடனே !…. க.குமரன்

பாலதேவகஜன்

இதயம் எதை எதையோ சுமந்து பதை பதைத்த என் இதயம் சுமைகளை இறக்கி சுகம் காண்பது எப்போ? வகை வகையாய் வலிகளை வாரியிறைத்த காலம் வாழ்விலே எனக்கு மட்டுமாய் கொடுக்கப்பட்ட வரையறையின்றி போன காயம். எத்தனை அடிகள் அத்தனையையும் தாண்டி எழுந்துகொள்ள எத்தனிக்கும்போதெல்லாம் மறுதலிக்கும் மாயம். சுடுமணலில் ஈரமாய் சுருங்கிக்கொண்ட கணங்களே! நான் சுகம் காணும் நேரம். மகிழ்வென்ற ஒன்றை மட்டுமே உமிழ்ந்து கொண்டிட மறுக்குதே என் இதயம். மாறும் மாறும் என்ற நிலை மாற்றமின்றியே நகருதே […]

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-290 . கவித்தலைப்பு…..! இதயம் ………… ஓயாது உழைக்கும் தானியங்கி – வாழ்வில் எதையும் தாங்கும்இடிதாங்கி! இரத்தத் சுத்திபம்பு – இது நின்றுவிட்டால் உயிருக்கே வம்பு! வலது வென்றிக்கல் இடது வென்றிக்கல் இதயம் – அதுபோல் வடக்கு கிழக்கு மாகாணமே ஈழம்! எங்களைப் பொறுத்து ஈழமும் இதயமும் ஒன்று – அட இல்லை என்றால் அவன் சுத்த மண்டு! உடலில் இதயப் புரட்சியின் இரத்த ஓட்டம் – இவ்வாரே எங்கள் விடுதலைக் காகவே […]