கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும்சந்திப்பு தலைப்பு பகலவன் ————- பகலில் வருபவன் பகலவன் பகலைத் தருபவன் பகலவன் காலையில் கிழக்கில் உதிப்பான் மாலையில் மேற்கே மறைவான் பகலவன் ஒளிபரப்ப வில்லையெனில் விவசாயி நெல்விதைக்க முடியாதே நெல்விதைக்கா விடில் அரிசியில்லையே அரிசியில்லையெனில் சோறு கிடையாதே பகலவன் வருகையால் பாரேமகிழும் பகலில் மக்கள் சுறுசுறுப்பாவார்கள் பகலில் திருடர் பயமில்லை இரவில் தூக்கம்தான் வரும் காலையில் இரைதேடும் பறவைகள் பகலவன் மறைய கூடுவரும் காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மந்தைகள் மாலையில் இருப்பிடம்சேரும் பகலின்றி இரவில்லை […]

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்.

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 255 தலைப்பு – பகலவன் பூக்களும் பறவைகளும் பூபாளம் இசைத்திட புற்களில் பனித்துளிகள் நளினமாய் நடனமாட குயிலும் கூவுது காகம் கரையது ஆதிதாளம் ஐதியில் பகலவன் உதயமாகிறான். ஆயிரம் நாமங்கள் அழகாய் இருந்தும் பகலவன் என்றதும் பாசமாய் இருக்குது பட்டினியில்லா வாழ்வில் படியளக்கும் சாமியது பட்டமரமும் பசுமையாகி வேடந்தாங்கல் ஆகுது. ஊதாக்கதிரவன் உலகெல்லாம் செம்மஞ்சள் பரப்பி வியர்வையை வெளியேற்ற கொழுப்பை கரைக்க இலவசமாய் மருத்துவம் […]

ஜெயம் தங்கராஜா

பகலவன் பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம் ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும் மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு எடுப்பு தூக்கத்தால் எழுப்பி ஊக்கத்தை நுழைக்கும் செங்கதிரே தற்காலிக ஒளியால் உற்சாகத்தை பொழிந்திடும் புதிரே தோன்றுவது மறைவது ஆண்டாண்டாய்ப் பறைவதும் பொய்யே சுழல்கிற தரையாலே விழுகின்ற திரையது மெய்யே அடிவானில் வழியும் குடிகொள்ளும் எழிலின் காட்சி முந்தியும் அழகு அந்தியும் அழகின் ஆட்சி அண்ட வெளியில் உண்டு ஒளியை […]

கீத்தா பரமானந்தன்

ணந்த்ஹன் சிந்தும் சந்திப்பு! பகலவன்! காலக் கணிப்பின் கதிரொளி இவனாய்ப் பாலம் போட்டே ஞாலம் இயக்கும் நல்லொளிச் சுடராம்! ஆக்கலும் அழித்தலும் அண்டத்தின் நகர்வும் ஆக்கிடும் ஞானியாய் அனைத்திலும் பகலவன்! சுழல்கின்ற பாதையின் சூத்திரம் கொண்டே நிலவிடும் இருளும் நீத்திய விடியலும்! பசுமையையின் பரவசம் பாலையின் கனலும் தணலெரிக் குழம்பும் தந்திடும் காரணி தாரணி வாழ்வினைத் தரமிட்டு நின்றிட ஆராதனையும் அறிவியலிலும் வேரான கோளெனக் காலாதி காலமும் காட்சியாய்ப் பகலவன்! கீத்தா பரமானந்தன் 04-03-24