எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 252 “காதலர்”. நினைக்க ஊறும் பரவசம் நெஞ்சில் ஓடும் ஒயில் முகம் கனக்கும் இதயம் கண்டதும் காந்தக் கண்கள் ஒன்றிடும். நித்திரை மறந்து இரவுகள் நினைப்பில் புரளும் கனவுகள் பத்தியம் ஆகும் உணவுகள் பசியே தோன்றா பொழுதுகள் எங்கே தோன்றும் முகமென ஏங்கும் தேடும் உள்மனம் வந்தால் நேரே வார்தைகள் வாயுள் நாவை பிழற்றிடும். கருமையும் தெரியும் அழகாக காதலில் பேதங்கள் குருடாக உருவிலும் ஊனம் பெரிதாக உளத்தில் தெரியா குறையா. உயிர்கள் […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 252 06/02/2024 செவ்வாய் காதலர் ———— தம்மையே தாம் மறப்பர் தனிமையே இனி தென்பர் இம்மையே சிறப் பென்பர் இதுவல்லொ சுகம் என்பர்! கண்ணாடி முன்னே நிற்பர் கண்சிமிட்டி கை அசைப்பர் முன்னோடி பயிற்சி செய்வர் முகமெலாம் அலர்ந்து நிற்பர்! கற்பனைக் கடலில் தோய்வர்.. கனவுலகில் திளைத் திடுவர்.. சொர்ப்பனச் சுவை காண்பர்.. சோதனை பல தாங்கிடுவர்! உறவுகளை எதிர்த் திடுவர்.. ஊருக்கும் பதில் சொல்வர்.. அறிவுரை ஏதும் கேட்கார்.. அனைத்தும் […]

சாந்தினி துரையரங்கன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தினி. அன்பு நிறைந்து ஆனந்தம் பொங்கி இனிதே வாழ்க்கை இல்லத்திலும் உள்ளத்திலும் உயர்ந்து நிறைந்து என்றும் மலர மனதார வாழ்த்துகின்றோம்..! பாமுகம் உறவுகள் அனைவரோடும்..

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : “கைக்குள் கையாய் கை தொலை பேசி” கைக்குள்ளே உலகை தந்து நிற்பாய் நம் காரிய நகர்விற்கு தொழில் நுட்ப தூரிகை ஆனாய் இடை வெளி குறைத்திடும் பாலமாய் நின்று உறவுடன் உலா வரும் காற்றலை ஆனாய் நமக்கு நாமே நம்பிக்கை கொண்ட புத்தகம் ஆனாய் நாள் தோறும் துயில் எழும் சூரியன் ஆனாய் வரவு எட்டு செலவு பத்தென அறிந்து கொண்ட பொழுதைப் போக்க புன்னகை வீசும் முகத்திரை ஆனாய் போவது போகட்டும் […]

நகுலா சிவநாதன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி கைக்குள் கையால் கைத்தொலைபேசி கண்ணைக் கவரும் வனப்பைப் பார் பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும் பண்பு நிலையைப்பாரீரோ! வையம் தன்னில் வரவும் செலவும் வருடம் முழுதும் போகுது பார் கையும் மீறி கதைத்த காசே கரையுது எங்கள் வரவுகளில் அடக்கமாகும் தொலைபேசி அமுதமாகப் பேசிடலாம் முடக்கமாக நாமிராமல் முயலும் விடயம் ஆற்றிடலாம் தடங்கலாகும் பாதைதனிலே தனித்து இதுவும் உதவிடுமே! மனங்கள் மகிழப் பேசலாம் மனதோடு ஒட்ட காட்சிகள் காணலாம் ஊடகப்பரப்பாய் கைக்குள் ஒளிருது […]

ஜெயம் தங்கராஜா

கவி 709 கைக்குள் கையாய் கைதொலைபேசி அடிமையாக்கி தனக்குக் கீழே வைத்தாலென்ன படிப்படியாக தூக்கத்தை தினமும் தொலைத்தாலென்ன நேரத்தை தின்றுமுழுங்கி ஏப்பம் விட்டாலென்ன பாரதூரமான கருவியிதென யாரும் திட்டினாலென்ன காலையில் எழுந்தவுடன் கைக்குள்ளே அடங்குமிது மாலை கடந்தாலும் நட்போ முடங்காதது உறவுகளும் தாராத அப்படியொரு சந்தோசம் திறந்துவிட பக்கங்களை வாழ்நாள் சுகம்பேசும் கையாள தெரிந்தவர்க்கு வாழ்க்கையிலே வரம் கையளவாய் இருந்துகொண்டு உலகளவைத் தரும் நோக்கியா முதற்கொண்டு சம்சுங்வரை நன்மையதே போக்கிய நாட்களுக்குள் பெற்றதென்றால் உண்மையதே சாபமென்று சொல்பவர்கள் […]

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 221 கைக்குள் கையாய் கைத்தொலைபேசி கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசியே இக்கட்டான நிலையிலும் கரம் கொடுப்பாய் எம்மை உனக்குள் அடக்கி வைத்து தன்னிலை மறந்து போக வைப்பாய் கைக்குள் அடங்கி விட்டாலும் இருந்த இடத்தில் உலகை சுற்றி வர உதவுகிறாயே உன் சேவையோ மிகப் பெரியது ஆனாலும் எம்மை சோம்பேறி ஆக்குகிறாயே மனைவி மக்களை பிரிந்தாலும் உன்னை பிரிவேனோ புதிய துணையாய் என்னுடன் வாழ்கிறாயே ஒருநாள் பிரிவாயென தெரியும் எனினும் இன்னொருவர் மகிழ்வுடன் வருவாரே நன்றி வணக்கம்