Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே காரிருள் வந்துசூழ காசினியும் மழையாகும் காலமும் கடந்து சென்று நேரமும் மாறிடும் தெருவோர மரங்களும் பழுப்பாய் காட்சிதரும் புல் இனமும் அழகாய் பச்சையாய் மாறிவிடும் தென்றலும் இல்லாது அமுக்கமாய் இருந்திடும் ஒளியும் வர்ணங்காய் மகிழ்வாய் காட்சிதரும்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893! கார்த்திகை மலர்விலே…! புனிதர்களின் நினைவேந்தி உதிக்கும் திங்கள் புலரும் காந்தள் மலர் கைசேரும் எங்கும் கருமுகில் முகம் தேடி அலையும் தினம் தினம் முளைக்கும் விடிவெள்ளி சொல்லும் மாவீரர் நாமம்…! நாடு மீட்கும் போரில் தந்தார் உயிர் விதை தேடும் உறவுகள் இன்னும் தேம்பலில் உள வதை எண்ண முடியாத தியாகம் இவர் செய்தார் எங்கள் விடியலுக்காய் கூவிய வீரக் குயில்கள் இவர்…! சிவதர்சனி இராகவன் 1/11/2023

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.11.23 பதிலூட்டும் உருவங்கள் கவி இலக்கம்-289 உயிரூட்டும் உருவங்கள் பயிர் வளர்ந்த விளைச்சல்-போல் நல்வழிகாட்டியாய் பதில் சொல்லிடுமே எழுத முடியாத தாக்கம் மனதோடு பதிந்த பந்தமல்லவே கிணற்றுத் தவக்கையாய் வாழ்ந்தவன் பார் போற்ற வணங்கிடுவான் துவக்கெடுத்தவன் துவக்குக் குண்டாலே சாவு கண்டிடுவான் கொடுமையில் தவிப்பவன் கடுமையாகத் துதிப்பவன் நடு நீதியாக நிலைத்திடுவான் வடுக்கள் சுமப்பவன் வெடுக்கெனத் துள்ளி எழுந்து மிடுக்கோடு பறை சாற்ற ஞாபகமூட்டும் சான்றுகளே நிலையாய் நின்று பதிலூட்டும் உருவங்கள் .

Selvi Nithianandan

தீபஒளி அடுக்காக தீபமேற்றி ஆண்டவனைஅலங்கரித்து அவனியிலேகொண்டாடும் ஆவளி திருநாளாம் புத்தாடை பட்டாசு பலகாரம் ஏராளம் புலத்திலே உறவுகள் மறந்ததே தாராளம் அசுரனை அழித்த வரத்தின் நாளாம் அகத்தில் ஒளியாய் அணியாய் சிறப்பே

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம்241 தீப ஓளியே அவன் முகம் பார்க்கிறேன் அவன் சிரிப்பை பார்க்கிறேன் மௌனங்களை தரிக்கின்றேன் கோபங்களை எதிர்கொள்கின்றேன் எனக்கு மட்டுமே தெரிகின்ற அந்த தீப ஓளியில் எத்தனை குமுறல்கள்! விரும்பாத பிரிவும் பிரியங்களின் ஏக்கங்களும் ஆசைகளின் தாபங்களும் அன்பின் வெளிப்பாடும் கூரிய சுடரில்! குத்தும் வேல்களாக ஆறாமல் பார்க்கின்றேன் அது சுடும் கனங்களில்! ஏற்றவும் விருப்பமில்லை அனைக்கவும் மனமில்லை பார்க்கின்றேன் ஓளியை பார்வைகள் பனிக்கும் வரை !…., க.குமரன் யேர்மனி

சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது திங்களொளியே கார்த்திகைபிறந்தால்தீப ஒளி கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம் கருணைபிறப்பதுதீப ஒளியில் கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய் மங்களம்துலங்கும்சக்தி ஒளியே மானிலம்சிறந்திடவேண்டிநின்று மங்களதீபம்ஏற்றுவோம்நாளும் ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக படரும்துன்பம்அகன்றுபோக தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம் ஏற்றியநாளும்தீப ஒளியே தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி ✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.

நகுலா சிவநாதன்

உதிரும் இலைகளே! உதிரம் இலைகளே! ஒருகணம் நில்லுங்கள் உலகம் என்வென்று புரியச் சொல்கிறேன் பழகும் காலம் பண்பாய் நடந்திடணும் பார்ப்போர் மகிழ நடந்திடணும் உயர்ந்த இடத்தில் இருக்கணும் உலகம் உன்மை மதிக்கணும் அயர்ந்து நீயும் தூங்கி விட்டால் அவலம் நிறைந்து பெருகிடுமே விழுகின்ற இலைகளே! மனித வாழ்வும் இப்படித்தான்! விழுகின்ற போது மிதிப்பார்கள் எழுகின்ற போது நகைப்பார்கள் விழாமல் இருத்தலே சாலச்சிறப்பு உயர்ந்த இடத்தை தக்கவைத்திடு ஊக்கம் கொண்டு வாழ்ந்திடு ஆக்கம் படைத்து மகிழ்ந்திடு அனைவர் அன்பையும் […]