சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தீபஒளி

அடுக்காக தீபமேற்றி
ஆண்டவனைஅலங்கரித்து
அவனியிலேகொண்டாடும்
ஆவளி திருநாளாம்

புத்தாடை பட்டாசு
பலகாரம் ஏராளம்
புலத்திலே உறவுகள்
மறந்ததே தாராளம்

அசுரனை அழித்த
வரத்தின் நாளாம்
அகத்தில் ஒளியாய்
அணியாய் சிறப்பே