Selvi Nithianandan

பள்ளிக்காலம் 586 இளமைக் காலம் இனிமைக் கோலம் இரண்டும் கலந்த இணைவுப் பாலம் ஆசிரியர் வருகை ஆனந்த ஊட்டம் ஆடல் பாடல் அரங்காய் கூட்டம் பரீட்சை வந்தால் பலரும் போட்டி பாங்காய் நாமும் வைப்போம் பேட்டி நினைவில் என்றும் மாறாச் சுவடாம் நீங்கா நிலையாய் அகத்தின் பொக்கிஷம்

Selvi Nithianandan

மாவீரரே கார்த்திகை வந்தாலே கண்ணீராய் நனைந்திடும் கல்லறைகள் எல்லாம் ஒளியாய் காட்சிதரும் காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய் காசினி பொழிந்திடும் தூறலாய் காந்தள் மலருமே தூய்மைக்காய் காரணன் சொல்லிட்ட வாய்மைக்காய் காலங்கள் ஓடித்தானும் செல்லுதே காரிகை அகமும் துடிக்குமே ஞாலத்தில் காவியமாய் நிலைபெறவே கனவுகள் நிலைத்திட பாலமாய் நாமும் செல்வி நித்தியானந்தன்

இ.உருத்திரேஸ்வரன்

பள்ளிக்காலம் கவிதை 208 துள்ளித் திரிந்து பள்ளி சென்ற காலத்தை இன்று நினைக்கையில் என் மனமும் மகிழுதே அதை நினைத்து ஏங்குதே படிப்பித்த ஆசிரியரின் பெயர்கள் இன்னும் மனதில் படிந்த நிலையில் வராதோ பள்ளிக்காலம் மீண்டும் என இன்றும் ஏக்கமே பள்ளியில் செய்த கூத்துக்கள் மங்கைகளை துரத்திய காலங்கள் ஆசிரியரிடம் அடி வாங்கிய பொழுதுகள் நினைத்தாலும் திரும்பி வராதே நன்றி வணக்கம்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1889…! பள்ளிக்காலம் இன்னும் பசுமையாய் என்னுள் இனிக்கும் காலம் இனியும் வேண்டும் என்றே மனம் தவிக்கும் கோலம்..! கல்வியில் மேன்மை தங்கியதே அழகிய பருவம் பல்விதமாய் நட்புக்கள் பூத்ததே நினைவில் பூக்கும்…! ஆசிரியர் சொல்லே மந்திரமாய் ஏற்றது மனது ஆசறக் கற்றோம் ஒழுக்கமும் வந்ததே பண்பாய்…! புள்ளிகள் பெற்றிடவே போட்டோம் போட்டா போட்டி பள்ளியில் பெறாதது எதுவுண்டோ பெற்றிடவே என்ன வழி…! வகுப்பேற்றம் தரு மகிழ்வு வெள்ளை உடையில் சிறகுவிரிப்பு உயர்தர கல்வியில் கலவன் […]

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-17 26-10-2023 பள்ளிக்காலம் பெற்றோரின் கனவுகளை புத்தகமாய் முதுகில் சுமந்து பள்ளிக் கூடம் சென்ற காலம் மற்றோரின் கனவல்ல புரிந்து கொண்ட நல்ல நேரம்! படிப்பு மட்டும் வாழ்க்கையற்று பட்டாம் பூச்சி போல் பறந்த காலம் சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி சமத்துவமாய் பக்குவமும் கொஞ்சம் பயின்றகாலம் சின்ன சின்ன சேட்டைகளும் சீண்டிப் பார்க்கும் வயசும் இது எந்த வயதில் நுழைந்தாலும் பழைய நினைவை […]