சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மாவீரரே
கார்த்திகை வந்தாலே
கண்ணீராய் நனைந்திடும்
கல்லறைகள் எல்லாம்
ஒளியாய் காட்சிதரும்

காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய்
காசினி பொழிந்திடும்
தூறலாய்
காந்தள் மலருமே
தூய்மைக்காய்
காரணன் சொல்லிட்ட
வாய்மைக்காய்

காலங்கள் ஓடித்தானும்
செல்லுதே
காரிகை அகமும்
துடிக்குமே
ஞாலத்தில் காவியமாய்
நிலைபெறவே
கனவுகள் நிலைத்திட
பாலமாய் நாமும்

செல்வி நித்தியானந்தன்