ஜெயம் தங்கராஜா

பள்ளிக்காலம் கவி 667 வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று தோழனாய் தோழியாய் சுற்றியே உலகம் நாளதை மகிழ்ச்சியின் உச்சத்திலேற்ற்றியது தாண்டியே அமைதியை குழப்படிகள் வேண்டியதெத்தனை பிரம்படிகள் பிடித்ததை படிக்காவிட்டாலும் படித்தவையெல்லாம் பிடித்தது பருவம் அதுவோ பூந்தோட்டம் உருவம் வடெனப் போலாடும் மழையிலும் போடுவோம் கூத்தாட்டம் தொலைந்துவிடாது நினைவுகள் கூட்டம் சின்னச்சின்ன மனங்களில் வண்ண வண்ண எண்ணக்களிப்பும் மூளைக்குள் அறிவை […]

நகுலா சிவநாதன்

பள்ளிக்காலம் இனிக்கும் பருவம் இதயத்தில் அது இன்பம் தந்த இளமைப் பருவம் துன்பம் அகன்று துயரம் மறந்து அன்பே துளிர்க்கும் அருமைப் பருவம் பள்ளிக்காலம் துள்ளி நினைவுகள் தூரச் சென்றிடும் மகிழ்வான காலம் வெள்ளியலையாய் வெண்சிட்டுக்களாய் அள்ளி அணைத்து மகிழ்ந்த பருவம் அகன்றே விட்டதே! எமைவிட்டு நினைத்தாலே இனிக்கும் பருவம் நிம்மதி தந்த வசந்தகாலம் நகுலா சிவநாதன் 1736

மதிமகன்

சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 240 31/10/2023 செவ்வாய் மாவீரனே! ————— கார்த்திகை இருபத்தேழு மாலை கதிரோன் சாய்ந்திடுமவ் வேளை, ஊர்த்திருக் கோவில் எங்கும், உமக்கென மணிகள் ஒலிக்கும்! சந்தனப் பேழையுள் துயிலும், சாதனை வீரர் உமக்காய், சொந்தங்கள் வந்து நிற்பர்! சுடர் விளக்கேற்றி வைப்பர்! புலம்பெயர் தேசம் தோறும், பூவால் உம்மை அர்ச்சிப்பர்! கலங்கிய உள்ளத் துடனே, கால்கடுக்க நின்று நோற்பர்! சட்டியில் தீபம் ஏற்றுவர்! சந்ததம் உம்மைத் தொழுவர்! பெட்டியாம் மனதில் வைப்பர்! பேர்புகழ் […]

மதிமகன்

சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 240 30/10/2023 செவ்வாய் மாவீரனே! ————— கார்த்திகை இருபத் தேழுமாலை கதிரோன் சாய்ந்திடும் வேளை, ஊர்த்திருக் கோவில் எங்கும், உமக்கென மணிகள் ஒலிக்கும்! சந்தனப் பேழையுள் துயிலும், சாதனை வீரர் உமக்காய், சொந்தங்கள் வந்து நிற்பர்! சுடர் விளக்கேற்றி வைப்பர்! புலம்பெயர் தேசம் தோறும், பூவால் உம்மை அர்ச்சிப்பர்! கலங்கிய உள்ளத் துடனே, கால்கடுக்க நின்று நோற்பர்! சட்டியில் தீபம் ஏற்றுவர்! சந்ததம் உம்மைத் தொழுவர்! பெட்டியாம் மனதில் வைப்பர்! பேர்புகழ் […]

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 176 பள்ளிக்காலம் துள்ளி திரியும் பள்ளிக்காலம் மகிழ்ச்சியான காலம் பாடங்கள் படிக்கவும் ஓடி விளையாடவும் போட்டிகளும் நிறையவே திட்டுகளும் நிறையவே நண்பிகளுடன் சேர்ந்தே நிறைய மகிள்ச்சியே நன்றி அபிராமி 😊

ரஜனி அன்ரன்

“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023 பள்ளிக்காலம் பசுமைக் காலம் பசுமை நிறைந்த உலாக்காலம் பட்டாம் பூச்சியெனப் பறந்து வட்டமிட்ட வனப்புக்காலம் கற்பனையில் மிதந்த கனாக்காலம் பெற்றவர் கனவை நனவாக்கிய காலம் என் வாழ்வின் வசந்தகாலம் ! திறமைக்கு களம் தந்த கூடம் திறவுகோலான மாடம் கவலையே இல்லாத காலம் சிலநொடிகள் மனக்கசப்பு சின்னச் சின்ன சண்டைகள் அடுத்தநொடி இணைந்தபடி போட்டிகளில் கலந்தபடி போட்டி போட்டுப் படித்திடுவோம் ! பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம் விளையாட்டுப் போட்டிகள் […]

வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்… அழகிய புள்ளியின் தொடக்கமே ஆகுமே வளர்ச்சியின் மிடுக்குடன் வெகுமதி நிறைந்த அடுக்கிலே வெற்றியின் சாசனப்பதிவிலே அகரம் பதித்த பள்ளிக் காலம் அடுத்து தொடரும் கல்வி ஞானம் நட்பின் ஒற்றுமை பெருகுமே நம்பிக்கை நிறைந்து வளருமே மேன்மை நிலையில் படிப்பும் மெல்லெனத் தொடரும் விளையாட்டும் கள்ளமே அற்ற நட்பின் வலுவும் கணதி குன்றிய வாழ்வின் வனப்பும் எங்கெனக் கிட்டும் இனிதே எமக்கு பறவைகள் போல பாடித் திரிந்தோம் பாசச் சிறகில் இணைந்து மகிழ்ந்தோம் நாளும் பொழுதும் நன்றாய் […]