ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-12 24-05-2023 முள்ளிவாய்க்கால் மே பதினெட்டு தமிழ் இன வரலாற்றில் மாறாத வடு சுமந்த கரி நாள். மனமெல்லாம் எம்மினம் எண்ணி வெந்து தவிக்குது இந்நாளில். தமிழினமே செங்குருதியில் தவழ குறைமாதத்தில் குண்டு பிளந்து வந்த சிசுவும் நிறைமாதத்தில் தாய் இளத்து நின்ற மகவும் குற்றுயிராய்க் கிடந்த தாயில் பாலருந்திய சேயும் உணவற்று இனத்தைத் துறந்து உறவைப் பிரிந்து வழிகாட்டிய தலைவனை இழந்து நடைபிணமான […]

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தமிழனே! “””””””” ஏறுபோல் இலங்கிடும் என்னரும் தமிழனே! எங்கணும் எம்மினம் ஏங்கிடல் வேண்டுமா? வீறுகொண் டெழுந்திடு வீச்சிலுன் தமிழெள வீரியம் தமிழென வெல்வதுன் கடனடா ஆறுபோன் றொழுகியே அற்புதம் நடத்தடா ஆற்றலை அடக்கியே அடங்கிடல் துன்பமாம் கூறுவாய் தமிழனின் குறைகளை நீக்கவே குலவிடும் பிறமொழிக் கலப்பினைத் தடுத்திடு! தூறுமா மழையெனத் தூவிடும் தமிழ்மகள் தூய்மையாம் சுதந்திரக் காற்றிலே வாழுவாள் மாறுமோ தமிழவள் மாசிலா மாண்புமே மானமே பெரிதெனும் மறவனே தமிழ்மகன் ஆறுமோ அடங்குமோ அன்னியர் அழிவலை அதுவரை […]

திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-223 – 23.05.2023 பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால் பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால் சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள் சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள் விதியாகி வெடிமருந்தில் சிதறிடவே விலையாக உயிர்களும் இறைந்தனவே கதியற்று கருமருந்தால் பொசிந்திடவே கனப்பொழுதில் கரியாக்கி குவித்திடவே இதிகாச வரலாற்றில் இதுவோர் இனஅழிப்பு தினமாக பதிவிட்டோர் நதியாகி குருதியும் ஓடியதே நயவஞ்சர் வெற்றிகோசம் பாடியதே பதியிழந்த மனைவிகளாய் பலருண்டு பட்டமர வாழ்ககையாய் பாவியுண்டு / அபிராமி (கவிதன் )

கமலா ஜெயபாலன்

முள்ளி வாய்க்கால் ————————— வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணே வருத்தங்கள் பலகண்டு வாட்ட முற்றாய் பந்தங்கள் தொலைத்து பட்டதுன்பம் யாரறிவார் பரிதாபம் என்பார்கள் பட்டது நம்மினமே கல்லால் அடித்தாலும் கரையாத பெரியம்மா செல்லால் அடிபட்டுச் சிதைந்தாவே குடும்பமாய் எத்தனை இழப்புக்கள் என்னவென்று சொல்லுவது இன்றும் வருவாரென்று ஏங்குவோர் எத்தனைபேர் உருவம் தெரியாமல் உடலும் கிடையாமல் உலர்ந்த மணலில் புதைபட்ட உறவுகள் இரக்கம் அற்ற இச்செயலால் என்னபலன் உண்மைகள் மறையாது ஒருநாள் தெரியும் கமலா ஜெயபாலன்