சிவரூபன் சர்வேஸ்வரி

பங்கு நீ ஃஃஃஃஃ தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் // வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே // சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி // பொங்கும் உள்ளத்தில் புதுமலர் நீயானாய்// கங்குல் பகலிரவும் பார்த்தும் நிற்பேனே // மங்கும் நிலையின்றி மகாராசி நீயுமடி // அங்கம் குளிருதடி ஆனந்தம் மிளிருமடி // பங்கமும் நேராமல் பார்த்தும் நிற்பேனடி // எங்கும் துலங்கும் ஏற்றமும் தேடிவரும் // சிங்கம் நானுமடி சினுங்காமல் வந்தேனே// சங்கும் இசைக்குமடி சாகித்தியம் பேசுமடி […]

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 295 விருப்ப தலைப்பு கும்பமேளா தீர்க்க வந்த பாவம் போகும் எங்கே போகும் பாவம் தேடும் கூட்டம் பரம் பொருளை எங்கே நாடும்! மாலை விற்கும் கூட்டம் பண வரவை அங்கே தேடும் காளை அவன் கண்கள் கரு நாகமாக பெண்ணைத் தேடி போட்ட வர்ண போட்டோ மீடியா புகழைக் காட்டி அழகி அவள் என அருகில் நின்று போட்டோ ஆளுக்கு ஒருவன் மீடியாவில் போட அவளுக்கு தொல்லை கூட மீள முடியாது […]

கமலாஜெயபாலன்

மாசி மாசிமாதம் மாசி மகிழ்வு தரும் அண்ணா வருவார் கொழும்பால சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக அவர் போக இல்லை எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல இரவிரவாய் நித்திரை விழிப்பு நண்பிகளுன் நல்ல கொண்டாட்டம் தீர்த்தக் குளமுடன் தித்திக்கும் உணவு சைவ உணவு தரும் நற்சுவை அம்மாவுக்கும் அதிலொரு உருண்டை அக்கா எடுத்து பையில்வைப்பார் நல்லதங்காள் காத்தவராயன் கூத்து இப்படியான பொழுது போக்குகள் இளம் காதல் சோடிகள் இங்கு காணாமல் போவதும் உண்டு எத்தனை இன்பங்கள் எம்நாட்டில் […]

கமலா ஜெயபாலன்

மாசி மாசிமாதம் மனதிற்கு மகிழ்வு தரும் அண்ணா வருவார் கொழும்பால சிவராத்திரிக்கு சிவன் கோயில் போக அவர் போக இல்லை எங்கள் நால்வரையும் அழைத்துச் செல்ல இரவிரவாய் நித்திரை விழிப்பு நண்பிகளுன் நல்ல கொண்டாட்டம் தீர்த்தக் குளமுடன் தித்திக்கும் உணவு சைவ உணவு தரும் நற்சுவை அம்மாவுக்கும் அதிலொரு உருண்டை அக்கா எடுத்து பையில்வைப்பார் நல்லதங்காள் காத்தவராயன் கூத்து இப்படியான பொழுது போக்குகள் இளம் காதல் சோடிகள் இங்கு காணாமல் போவதும் உண்டு எத்தனை இன்பங்கள் எம்நாட்டில் […]

சாமினி துவாரகன்

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது… போர்வையை விலக்க மனமின்றி இறுக்கிப் போர்த்து படுத்திருந்ததும்… தண்ணீரை அள்ளிக் குளிக்க மனமின்றி அரைமணி நேரமாய் அலாசிக்கொண்டிருந்ததும் … வழி ஓரம் கிடக்கும் புல் நுனியில் படர்ந்திருக்கும் பனித்துளிகளை தொட்டு இரசித்ததுவும்… இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது… சிவராத்திரிக்கு கண் விழித்ததும் மக நட்சத்திரத்தில் மண் தொட்ட மாமனுக்கு விஷேச அர்ச்சனை செய்ததும்….. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது…. குறை மாதக் குழந்தையே! இன்னொன்றும் ஞாபகம் இருக்குறது… அசடு வழியும் காதலர்கள் […]

சக்தி சங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு மாசி ****** அறுசீர் விருத்தம் சீர்வரையறை: காய் காய் காய்/ காய் காய் காய் மாதங்கள் பன்னிரண்டில் மாசிமகம் மகத்தான பெருவிழாவாய்க் கொண்டாடி பூதலத்தோர் நீராடி மகிழ்ந்திடுவர் புதுமையான காட்சிகளும் கடற்கரையில் மாதவமும் செய்தேன்நான் மாசியில்தான் மாங்கல்ய நாண்பூட்டு விழாவதுவும் நாதஸ்வ ர ஓசையோடே நடந்தேற நறுமணமாய் மாலைகளும் மாற்றினோமே! உடன்பிறப்பு மூத்தண்ணன் கலந்துகொண்டு உரிமையோடு தேங்காயை உடைத்திட்டார் கடந்துபோன விழாவிலேதான் கடைசியாகக் கண்டேன்நான் அவர்உருவம் என்செய்வேன் அடங்காத ஆணவத்தை […]

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

மாசி 🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-60 04-02-2024 மாசி மாசி மகம் மகத்துவம் கேளாய், கடலில் நீராடி மனிதநேயம் வளர்ப்பாய் ஏழை எளியவர்க்கு தான தர்மம் செய்ய ஏங்கிய புண்ணியம் தானாய் வருமாம். மாசியிலே சிவத்தோடு சக்தி இணைவரே மகாசிவராத்திரி விரதமும் இவரே மகாசங்கடஹர போக்கும் சங்கடங்களை மாசி பெளர்ணமி சிறப்பு தர்ப்பணத்திற்கு சீரற்ற ரத்த ஓட்டம்,மாரடைப்பு, மனநோய் சளி மூட்டுவலி பக்கவாதம் பலவாறாய் பனிக்காலப் பிணியும் பின்தொடருமே […]

பாலதேவகஜன்

மாசி உள்ளம் நினைத்தவளை உருகி கிடக்கையிலே உணர்வில் ஏற்றிவைத்து உயிராக நேசித்தேன். உண்மை உணர்ந்தவளும் உடன்பட்டு கொண்டிடவே உச்சி குளிர்ந்துநின்று உலகை மறந்துவிட்டேன். உருவப் பிடிப்போடு என் உள்ளம் நுழைந்தவளின் உள்ளத்து மேன்மை கண்டு உறைந்தே போய்விட்டேன். உச்சமாய் என் வாழ்வு உன் வருகையோடு ஆனது உள்ளத்தில் இன்பம்மட்டும் உட்கார்ந்து கொண்டது. மாசி பிறந்தால் தான் காதலர் தினம் வருமாம் என்ற காத்திருப்போடு மட்டும் என்றைக்கும் நான் இருந்ததில்லை நீ என்னுள்ளே வந்து எனக்காகவேயான நாளிலிருந்தே எனக்கு […]

Sarvi

மாசி இரண்டாம் திங்களாகி….இரண்டெழுத்தினில் வலுவாகி…பக்திக்கு உளமாகி…மண்ணின் அறுவடையில் பேரின்பமாகி…. அள்ளி இன்பம் கொடுக்கும் மாசியே வருக….வருக….. ஒரு பக்கம் உன்வரவு கொள்ளை இன்பம்…..மறுபக்கம் மாரடைப்பால் மண்ணிலிருந்து விண்ணுலகம் சென்ற எங்கள் தந்தை மறைந்த திங்கள் மாசியே…. பன்னிரண்டு வருடங்களின் பின் பெற்றிட்ட தெய்வங்கள் தரிசனம் பெற்றிட…. வேண்டிய விமானச்சீட்டு வாரம் ஒன்று முன்னதாக….ஃபிளைற் இன்னும் எடுக்கவில்லையோ பெரியபிள்ளை….நான் இங்கே வாசலில் குந்திக்கொண்டிருக்கிறன் பிள்ளை எப்பவரும் வருமென…தன் ஆவலை வார்த்தைகள் வர்ணிப்பில் ஒவ்வொரு நொடியிலும் கரைத்தபடியிருந்த “அத்தா ” […]