Jeya Nadesan —————————- தமிழர் தெரு விழா மீண்டும் வந்தது பதிமூன்று ஆண்டுகளாக இடம் பெறும் விழா மூன்று நாட்களாக தொடர்ந்து கொண்டாட்டமே டோர்ட்முண்ட் நகரின் பூங்காவி்ன் மத்தியிலே கொடி பறந்தது தமிழர் பண்பாடாய் பதித்தது திசையெங்கும் சோடனை அலங்காரங்கள் போதியளவு கூடாரங்கள் இருப்பிட வசதிகள் பன்னாட்டு மக்கள் ஒருங்கே கூடியது காட்சியாயின நகர மேயர் பெரியோர் கலைஞர் கவிஞர் எழுத்தாளர் சிறுவர் பெரியோர்கள் காவலர்கள் உட்பட முதன்மையில் ஊர்வலமாக குத்து விளக்கேற்றி தரணி போற்றும் தமிழ்ப்பண்பாட்டு கலைகள் ஒவ்வொன்றும் கற்பிக்கும் முத்திரையாக பறை காவடி கோலாட்டம் நடனம் மயிலாட்டம் பொய் குதிரையாட்டம் யாவும் பூதலம் போற்றும் பொலிவுறு கலைகள் காட்சியாயின தமிழர் பாரம்பரிய உணவுகளாக பற் சுவையுடன் கூழ் கள் இளநீர் பனங்காய் பணியாரம் மோதகம் அப்பம் பலரும் உண்டு கழித்து மகிழ்ந்தது பெருமையே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆயத்த நிலையில் அருங்காட்சியாய் இருப்பு நிலையில் உயர்ந்திருந்தது ஜேர்மனிய எழுத்தாளர் சங்கம் நூல்கள் பலதை அறிய வைத்தனர் உறவுகள் சந்திப்பு பன்னாட்டு மக்களின் ஒன்று கூடல் மிக மிக ஆச்சரியமாக ஆரோக்கியமாக சிறப்பு பெற்றது தமிழர் புகழ் பாரெங்கும் பரவிடவே விழா அமைந்திருந்தது தமிழெனப் போற்றி ஒழுங்கு அமைத்த அனைவருக்கும் நன்றி
Jeya Nadesan