Jeya Nadesan
Jeya Nadesan
Jeya Nadesan
கவிதை நேரம்-17.10.2024 கவி இலக்கம்-1932 உதிரும் இலைகள் ——————- இறைவன் படைப்பிலே இயற்கை இயற்கையில் வானுயர்ந்த மரங்கள் விரிந்த பரந்த மரங்களில் கிளைகள் கிளைகள் நிறைந்த பசுமை இலைகள் கொப்புகளில் பல வர்ண பூக்கள் பூக்கள் நடுவிலே காய் கனிகள் பறவைகள் உண்டு மகிழும் உணவு கூடுகள் கட்டி சீவிக்கும் பறவைகள் கோடைகள் என்றாலே கும்மாளம்தான் மாரி வந்தவுடனே பழுக்கும் இலைகள் காலம் மாறி இலைகள் சருகாகும் சருகுகள் அதிகம் கொட்டி நிலம் பரப்பும் நிலத்தில் உதிர்ந்த சருகுகள் அதிகமாகும் காலால் வாகனங்கள் மிதி பட்டு நசியும் கூட்டிப் பெருக்கி குப்பை பெருகும் எரித்தளிப்பர் பயிர்களுக்கு பசளையாகும் இலைகள் உதிர பட்ட மரம்போல் பரிதாபக் காட்சியே பார்க்க தோன்றும் மரணித்து அழிந்தது உதிர்ந்த இலைகளே Jeya Nadesan