வியாழன் கவிதை

Vajeetha Mohamed

எங்க ஊ௫ பெ௫மை சொல்வேன் கேளு
புள்ள

மாந்தற ஆற்று தண்ணி எடுத்து
மாஞ்சோலை வயலுக்கு நீரிரைப்போம்
)பனிச்சங்கேணி பட்டியிலே பாலெடுத்து
பாலைநகரில் தயிர் ௨றைப்போம்

காயங்கேணியில் மீன்பிடித்து
காவத்தமனையில் காயவைப்போம்
காத்தான்குடியில் பன்பாயிழைத்து
கல்லடிவரை போட்டு விற்போம்

மீராவோடையில் அவலிடித்து
மீயாங்குளம் வரை கூவிவிற்போம்
பாசிக்குடாவில நீச்சல் அடித்து
நாசிவன்தீவில காற்றுவாங்கி
புரியாணியுண்போம்

மகிழடிக்காட்டில தேனெடுத்து
மண்முனையில் கல்லுவெட்டி
வாழைச்சேனையில் காகிதம்செய்து
ஓட்டமாவடிசந்தியிலே விலைப்படுத்திடுவோம்

ம௫தமுனையிலே சாரன்நெய்வோம்
பாலையடிவெட்டையிலே சேனைசெய்து
கட்டுமுறிவில காற்றுவாங்கி
தாமரைக்கேணி அ௫கே ஊரேகூடும்

வாங்க வாங்க இன்னும் இ௫க்கு எங்க
ஊரின் பெ௫மை காண

நன்றி