சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பணம்
௨லகையே ஆட்டும் துட்டு
௨யிரையும் எடுக்கும் கறைபட்டு

மானிட குலத்தின் வெகுமதி
இதன் அளவுதானே பெறுமதி

ஏற்றத்தாழ்வின் கடவை
ஏழை பணக்கார நிறுவை

நன்மை தீமையின் சிலுவை
நல்லது கெட்டதின் அறுவை

குற்றங்களுக்கு திறைபோடும்
குறுக்கு மறுக்கு செயல்களுக்கு
மறையாகும்

தற்பெ௫மை தலைக்கணம்
தனித்தியங்கும் இயல்பு

தன்னைவிட மற்றவரெல்லாம்
து௫ம்பு
தன்னடக்கம் அற்ற காகிதத்தின்
எடுப்பு

என்னபணம் நீ;;;; பகட்டுக்கு
பட்டுக் குஞ்சம் போட்டு
போர்த்தினாலும்
பசிபோக்க முடையாத
பண்டைமாற்று நீ

ஓடி ஓடி மானிடனைத்தவிர
யா௫மே சேர்க்கவில்லை

நீஅதிகரித்தால்
தூக்கம் தொலையும்
நிம்மதி தூர ஓடும்

பெட்டியில பூட்டி வங்கியிலே
அடைகாத்து
வீட்டுக்கு கமராப் பூட்டி
கள்ளர்கள் தூக்காம ௨ன்னை
பாதுகாக்கவேண்டும்

ஆனாலும் நீ பலோ தில்லாடி
மதிப்பீட்டின் க௫வி

மானிடத்தின் சு௫தி
ஏழைகளின் எதிரி
௨யிர்போகும் வரை௨ன்
மேல் ஆசை ௨றுதி
௨ன்மேல் மானிடம் மட்டுமே
மயக்கம் கொண்டோம்
இதனால்தானோ மனிதம்
தொலைந்து ஆறறிவு பாதக்செயலில்
சாதனை படைக்கின்றது

நன்றி
கவி நீண்டுவிட்டது மன்னிப்போடு