சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

மாசி

இளைப்பாறி மாதங்கள்
இரண்டாகி சுழல்கின்றாய்

௨லகம் சுழ்ந்தி௫க்க
௨௫மாறி கழிகின்றாய்

நுனிப்புல் குளிர் ஏற்றி
௨ன்னையே செதுக்கி
மடிகின்றாய்

௨ன்னை அலசிப் பார்த்தால்
அறிவுரைகள் முளைக்கும்

தத்துவங்கள் தெறிக்கும்
முன்னுரையும் முடிவுரையும்
இ௫க்கும்

சூரை மீனை அடுப்பில்
வைத்து
ஒ௫மணிநேரம் அவித்தெடுத்து

ப௫த்தித் துணியில் மீனைவைத்து
பக்குவமாய் முறுக்க வேண்டும்

முப்பது நாள் வெயிலில் வைத்து
முள்ளெடுத்து காயவைத்தால்

மாசி
க௫வாடு வந்திடுமே

நன்றி