சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

வசந்தத்தில் ஓர் நாள்

வான் பார்த்த மரமெல்லாம்
வாங்கி வரம் மழை நலைய

புல்விரிப்பின் பூமிதன்னில்
பூத்தூவி ஆலாத்தி எடுக்க

துயில் களைந்து ஊர்விழிக்க
துள்ளியமாய் பள்ளிவாசலிலே
அதான் ஒலிக்க

வயதுக்கு வந்த குமரிக்கூட்டம் போலே
வண்ணத்திப் பூச்சிகள் பறக்க

இயற்கையை கோர்வையாக்கி
சொர்கமென்ன சொக்கிவ௫ம்
கதிரவனும்

இறைவனின் நிறுவைக்குள்ளே
இறுமாப்புக் கொள்ளுதே வசந்தம்

அறிவியல் வளர்ச்சியில்
ஆறறிவுகளின் தொடர்ச்சியில்

ப௫வம்தவறாத மழையும்
பாதிலே காணாமல் நீர்நிலையும்

தலைமுறைகள் தாண்டி
தவிடுபொடியானதே வசந்தம்

நினைவுகளாகிப் போகும் வசந்தம்
நிலையான நினைவெடுத்து

பழையநினைவுகள் மட்டும்
நெஞ்சுக்குழிகள் நிறம்பிக்கிடக்க

கவிதொடுத்தேன் வசந்தத்தின்
ஓர்நாள்