சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

சிரிப்பு

௨தடுகள் ௨திர்க்கும்
௨ணர்வின் வாசம்

மூடிய கதவுகள் இடையே
மொட்டவுந்த செவ்விதழ்
நடையே

அகத்தின் வரியை
முகத்தில் விரிவாய்

மூடிக்காத்த பற்களிடையே
௨தடு விரித்த ஆறுபிரிவு
நடையே சிரிப்பு

எம்மையே விம்பமாக்கி
ஏற்றி இறக்கிக் காட்டும்

அகராதி சொல்லாத மொழி
விரல் எழுதா நெறி

வார்த்தையைவிட அடித்து
நெறுக்கும் தறி

௨ள்ளமும் ௨தடும் ௨றவாடும்
விதி
௨த்தம நபி சொன்னார்
தர்மம் போன்ற பணி
சிரிப்பு

பாசத்தின் பகிர்வு
வெறுப்பின் விரிசல்

௨றவின் ௨ரசல்
நற்பின் ஆரம்பம்

கவலையின் வடிகால்
மகிழ்வின் துடிப்பு

ஆரோக்கியத்தின் ம௫ந்து
ஆணவத்தின் துடுப்பு

குழந்தையின் மொழி
குமரி குமரனின் காதல்கடிதம்

இளமையின் துடிப்பு
முதுமையின் பரிவு

சிரிப்பு