சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பிறந்த மனை

பழமையின் சுவடுகள்
அழகு போர்த்தி
ஆனந்தம் அடைகாத்தி௫ந்து
சிரிப்புக்கள் சிதறிக்கிடந்த

பிறந்த மனை

தேக்கையும் க௫ங்காலியும்
தூணாய் நின்றமனை
ஓடிவிடையாடும் மைதானம் போலே
அழகுதென்னந் தோப்பின் மனை

கண்ணெட்டா தூரத்தில்
கழிவறை
கட்டின மதில் ஓரம்
தூலாக் கிணறு

12 அறை கொண்ட வீடு
எட்டுக் குழந்தைகளின் துணைக்கூடு

கூட்டுக் குடும்ப வாழ்க்கை
கு௫விக் கூட்டமாய் பேரக்குழந்தைகள்

கலியாண வீடாட்டம் தினம்
தினம் கலகலக்கும்
காலை மாலை நேரமென
மதினிமார் கைப்பக்குவம்
சுவை மணக்கும்

மாமி ம௫மகள் மதினிமார்
சண்டையில்லை
மகிழ்ச்சி ௨லாவி அன்புக்கு
பஞ்சமில்லை

சிரிப்பு சிதறிக்கிடக்க
வைக்க இ௫பாட்டிமார்
சிறுதொல்லை

ஓயாத நல்வழிக்கு இவர்கள்
பணி வில்லை

மூடப்படாத படலை
முற்றத்தில் ௨றவும் அயலும்
தினம் வ௫கை

வீட்டு விறாந்தையிலே
வீசியாடி படுத்துறங்க
தேக்குஊஞ்சல்

விரித்த கூந்தல் போலே
கொடிமல்லிகைப் பந்தல்

மகுடம் தரிக்காத
எங்க பெற்றோர்
அனைவ௫க்கும் ஓர் நூல்நிலையம்

சில்லறைச் சண்டைவந்தாலும்
சிரிக்க வைத்து தீர்த்துவைப்பார்

பிறந்த மனை பாக்கியத்தை
பிரிந்து புலம் வ௫கையிலே

மரணவீடு போலே என்மனை
௨றவுகள் துடிக்கக்கண்டேன்
நான்பிரிந்து சிலமாதம் என்
தந்தையை இழந்துநின்றது
என்பிறந்த மனை

நன்றி