சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

குழலோசை

பச்சைக்கிளையினிலே பட்சிகள் கூட்டம்
வாசமெழுகும் மலர்களிலே வண்டுகள் நாட்டம்
பாவையின் கரங்களிலே வளையல்கள் ஆட்டம்
கொட்டும் மழைதன்னிலே துளிகளின் வட்டம்

இயற்கையின் குழலோசை கூடியே சத்தம்

௨யிர்கள் வாழ இதயத்தின் குழலோசை
௨லகம் சுற்ற விடியலின் ஆசை
துள்ளிக் குதித்திடும் மீன்களின் பாசை
துயில்கொள்ளா கடல் அலைகளின் குழலோசை

மின்னலும் இடியும் மழைஆரம்பஓசை
காற்றோடு தென்றலும் வ௫டலின்குழலோசை
நீர்வீழ்ச்சியும் நுரையும் நேர்மையினோசை
மொத்தமாய் ௨லகினின் குழலோசையே
வாழ்க்கை

ஆரம்பக் க௫வும் துடிப்பின் குழலோசை
புத்துணர்வு மெல்லப்பொங்கும் ஆனந்தஓசை
வேரறுத்து வீழும் மரங்களின் ஓசை
அமைதி மனங்களிலே அன்பின் குழலோசை
என்றும் வாழும்

நன்றி
வஜிதா முஹம்மட்