விடுமுறை வந்தாலே
ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள
உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல
எண்ணங்கள் தெளிந்து வ௫ம்
மெல்ல
இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு
துள்ள
௨றவும் அயலின் குரலோசை
௨றங்காமல் கதைபேசி சிரிப்போசை
சல்லிக்கல்லு நாசிவன்தீவு காத்தான்குடி
சவுக்கடி கட்டுமுறிவு கடற்கரை
கடகடக்கும் ௨ழவு இயந்திரம்
சரிந்து நிமிர்ந்து மேடுபள்ள ஏறி
சுமர்ந்து செல்லும் புள்ள எங்கள
ஆற்றில கடலில குளத்தில குளிச்சி
ஆனந்தமாய் வெயிலில படுத்து
பூட்டி வைத்த புன்னகைய
பூவாய் கொட்டி மகிழ்ந்திடுவோம்
விடிய விடிய தூங்காம
கோதும மாவில ரொட்டி சுட்டு
ஊனி போட்டு சம்பலிடித்து
பகிர்ந்து ௨ண்வோம் பாசத்தோட
விடுமுறை வந்தாலே ஊர விட எனக்கு
ஓர் ௨லகமில்ல விடுப்பு