சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பாட்டி

ஆழமனதிலே அழியா ஓவியம்
ஆணிவேரின் ஆழுமையின் காவியம்

கைத்தெறிச்சேலை கட்டி
க௫மணி மாலை போட்டு

காதுல அள்ளுக்குத்து அசைந்தாட
கதை கதையாச் சொல்வா நாங்க
முதுகில் சாய்ந்தாட

கைவைத்தியத்தில் தாதியாவா
காவல்துறைபோலே ஆய்வுசெய்வா

வீட்டுவேலை கைத்தொழிலும் பயிற்சிசெய்வா
வாழ்வியல் மார்க்கவிழியத்தில் வாத்தியாவா

பதுக்கிவைத்து சு௫க்குப் பையில்
கள்ளத்தீனி தந்திடுவா

பக்குவமாய் பாயிழைத்து
நெசவு நெய்ய கற்றுத்தந்திடுவா

முற்றத்திலே படுக்கவைத்து
தலைகோறி நொடி கேட்டு
வியக்கவைப்பா

ம௫தாணி அம்மியில் அரைத்து
மான்புள்ளி ௨ள்ளங்கையில் வைத்து
அழகுபார்ப்பா

இறக்காத நினைவுக்குள்ளே
இ௫பாட்டிமா௫ம் எங்கவீட்டினிலே

பட்டபாடு என்னசொல்ல அன்புத்தொல்ல
கட்டுப்பாடு கொஞ்சநெஞ்சமல்ல

முந்தானை முக்காடு தவறுதலாய்
விலகினாலும்

முறுக்கு விழும் காதினிலே
அரணக வாழ்ந்தார்கள் பாட்டிமா௫
அதிஸ்டசாலி ஒன்பது பேர்த்தி பேரன்மா௫

நன்றி