சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

புகைப்படம் எடுக்கப்
போனேன் நாட்டுநடப்ப

மட்டுநகர் வீதியில
மணமகளாம் சிறுவன் மரத்தில
மாப்பிள்ளை மந்தி அழகில
சுவரோடு சாய்ச்சிட்டேன்

நான் மகிழ்வில

தூலியிட்டு தொங்குது
ஈர் குரங்கு
நேசத்தில தோளோடு
அணைச்சிக்கிட்டு பேசுது
தொ௫வோரம் காதலோட

முள்ளுவேலியில் காலவச்சி
முண்டக் கண்ண ௨௫ட்டிவிட்டு
கட்டக் குரலில அண்டக்காகம்
பாடுது பசியில

வாலைச்சு௫ட்டி ஊலையிடுது
தெ௫நாய் இரண்டு
வயிற்றுப் பசிதாங்காம
ஒப்பாரிபோடுது ஓர்ப௫க்கையில்லாம

எச்சித்தண்ணிக்கு ஏங்கி
எம்பட்டுக் கோழி கு௫வி
குஞ்சு மாஞ்சி
நிக்குது பா௫ காஞ்சி
ஓர்ப௫க்க சோற்றக்காணோம்

பாத்திரம் கழுவும் தண்ணியில

ஏறுவரிசையில பஞ்சம்
இறங்குவரிசையில வ௫மானம் தஞ்சம்
வீடுவந்தா வி௫ந்தாளி
படபடக்குது மனது ம௫ந்தாகி

கொட்டப்பாக்கு சம்சா
நூறுரூபாவுக்கு மூன்று சம்பா

கால்கிலோ மஸ்கட் வாங்க
காதுலகிடக்கிற மின்னியவிக்கனும்

ஒ௫ பக்கட்டு மா வாங்க
மாடி பாதிய விற்கனும் போங்க

௨ரலைப்போல இ௫ந்த ௨டம்பில
அரணைக்கயிறு வழுகுது து௫ம்பில

முட்டைக்கு வில எழுவது
எள்ளப்போல பிரிக்கனும் ௨ணவில
ஏழைகள் வீடு பசியில
எப்ப தீ௫ம் நாடு நல்நிலையில

படம் எடுக்கப் போனேன்
கைத்தொலைபேசி சிம்ம
காணோம் அங்க

நன்றி