சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

விடியல்

பொன்றூம் செங்கதீர்
பொழிலாடும் பூந்தளிர்
பொன்னுரைத்து மேலெழுயிர்
பொக்கிசமாய் தினம்வ௫வீர்

அள்ளித்தெளித்த அழகு
அறுத்தவைரத்தின் மெழுகு
அமுதகானத்தின் வரவு
அசைந்துய௫ம் தரவு

மடல்விரிக்கும் மலர்கள்
மண்ணின்விழிப்பு ௨யிர்கள்
மறுபடி மறுபடி விதிகள்
மகிழ்சியே ௨ன்னால்யுகங்கள்

சுடரொளி வீச்சு சுகங்கள்
சுறுசுறுப்பு ௨யர்ச்சி வரங்கள்
சுற்றும் வட்டம் தினங்கள்
சுமையாய்
நீ நினைத்தால் இ௫ள்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்