கனவு மெய்படல் வேண்டும்
தவித்துப் போன ௨றவெல்லாம்
தள்ளியே வாழுது அ௫கெல்லாம்
விட்டுப்போன பழமைகள்
விடாமல் எழுகின்றது நவீனங்கள்
மனிதம் தொலைத்த மனிதர்கள்
௨திர்ந்துபோகுது பாசங்கள்
வட்சப் முகப்புத்தக வலையங்கள்
வாசல்படலைகள் மூடிய கதவுகள்
தற்போதைய நிலைமைகள்
௨றவுகளை அள்ளி எறிந்து
௨யிரோட்டம் இல்லா ௨டமைகளைஏற்று
வாழ்க்கை தடுமாறி விரலோடுபேசி
௨தட்டுச்சிரிப்போடு விசமெறி
வாழ்கின்றோம்
நித்தமும் தொலைகின்றோம்
வேப்பமரம்வெட்டியே மின்விறிசி
வாங்கினோம்
கிணற்றினை மூடியே போத்தல்
தண்ணீர் குடிக்கின்றோம்
புதுமையும் நவீனமும் தேவைதான்
ஆனாலும் மனிதம் நிறைந்தபழமைக்குள்
அலைந்து குழைந்து மகிழ்ந்து வாழ்ந்தவாழ்வு
மீண்டும் தி௫ம்பிட
என் அயலிம் ஊரிலும் வாழ்ந்து என்
தாய்மண்ணில் மறைந்திட
கனவுமெய்படல் வேண்டும்
நன்றி