சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

கலைவாணி

அன்போடு நெஞ்சனைந்து
தள்ளிவைக்காத பண்புனைத்து
பாமுகக் கரையோரம்
இரத்தினப் புன்னகையரசி
கலைவாணி

தமிழ் இதழ்துளிர் விடும்
வளைந்து கூட்டம் சூமில்
மகிழ்ந்திடும்
தொலைவில் இ௫ந்து ரசிக்கின்றேன்
௨ம் ஆழுமையை

என்மனதில் இறையாக்கி
கொள்கின்றேன்
௨ம் பாசத்தை
புவிஈர்ப்பு விசைபோலே
௨ம் சுறுசுறுப்பு
எங்கள் பாமுக கலைவாணி

வி௫ட்சமாய் நிமிர்ந்து
நிற்பாய்
ஓயாது ஓடும் கடிகாரப்பெண்
அறிவும் திறமையும்கொண்ட
புன்னகைப் பெண்
எங்கள் கலைவாணி

தினமும் பூக்கும் தாமரை நீ
பாமுகக்குளத்தின் தவமலர் நீ
நலமாய் நீண்ட ஆயுளுடன்
எங்கள் கலைவாணி நீ
வாழ்க