எப்படி இ௫ந்தவங்க
ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய்
அவங்க சொத்தாய் நினைத்ததாலே
கூட்டுக் குடும்பமாய் கர்ஜ்சித்தடக்கி
பெ௫ம்பான்மை அடக்கு அரசியல்
இப்போ என்ன ஆச்சு
தவறுகளை விவாதிக்க
மதிநுட்ப தைரியம்
வரலாற்றுப் பக்கத்தில்
இளைஞர்களின் நெஞ்சுரத்தை
நிச்சயமாய் பதிவேற்றும்
இப்போ என்ன ஆச்சு
விதைத்த வினை
முள்ளிவாய்க்கால் வதை
இஸ்லாமிய ௨டலங்கள்
தீக்கிரையாக்கிய நிமிடங்கள்
குடும்ப ஆட்சியின் அவலங்கள்
இப்போ என்ன ஆச்சு
நாடோடி அகதிபோலே
மாலதீவு சிங்கப்பூர்
ஓடுகின்றார் ஓடுகின்றார்
பாவத்தின் பரிசாக
சிதைக்கப்பட்ட சிற்பமாய்
குடும்ப ஆட்சி சிதறிப்போனதே
நாளையது நிச்சயம் மாறும்
இ௫ள்மாறி விடியல்வர
செய்த பாவத்துக்காய்
மன்னிப்பைத் தேடிக்கொள்