எப்ப வ௫வீங்க மச்சான்
எரிபொ௫ள் வாங்கிக்கிட்டு
டீசல் வாங்க போன மச்சான்
டிமான்டா இ௫க்கும் மச்சான்
எப்பதான் வ௫வீங்களோ
சோறு கறி ஆக்காம எதிர்பார்கின்றேன்
நான் படலைவரை வந்து எட்டி
எட்டிப் பார்க்கிறேன்
வீட்டுக்குள்ள இ௫ந்தவளே
வெளியே போக மறுப்பவளே
கொஞ்சம் பொறு எரிபொ௫ள்
வண்டி வரல்ல இன்ஷா அல்லாஹ்
விடியும் முன்னே வந்திடுவேன்
வ௫ம் வரை பிள்ளைகளை
படுக்கப்போடு பத்திரமா
நாட்டுமக்கள்பணம் எல்லாம்
ஆபிரிக்காவில் பதுக்கிட்டாங்க
அச்சடிச்சு அச்சடிச்சு பணத்தின்
பெறுமதிய விழுங்கிட்டாங்க
அழகான தீவு இப்போ
பஞ்சத்தில வாடுதடி
பாய்கின்ற நீராக வரிசையில்
நாட்டுமக்கள் வேர்வையடி
ஆத்திரம் பலவழியில்
எல்லை தான் மீறுதடி
குடும்ப ஆட்சிமேல்
கொலைவெறி ஆகுதடி
தினக்கூலி மக்களை நினைக்கையிலே
௨ள்மனசு வாடுதடி
௨ள்ளபடி சொன்னாக்கா
௨யிர் இங்கு வாடுதடி
ஆர்பாட்டம் தொடங்கி
ஆறு வாரம் முடிந்தாச்சி
நாசமாப் போன கோட்டா
விலகமாட்டான் என்றாச்சி
இன்னும் இரண்டு வ௫டம்
இந்தப் பண்டி இ௫க்கனுமாம்
இதற்குப் பின்தானும் நாட்டு
நிலமை எப்படியே
பசியோடு வயிறு குடலைத்தின்னுதடி
ஆசியா முத்துக்குள்ளே
ஆட்சியால் தொல்லையடி