சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

அவளவு அ௫மையான நாடு

விசையென சூழலும் வறுமை
மனித நேயம்சூறையாடும் நிலமை
சோகங்கள் மட்டுமே புதுமை
புயலாய் எழுகின்றது ஈழத்தீவில்
இயலாமைதோ

ஆதிக்கவர்க்கங்கள் ஆட்சிப்பீடம்
பசிதீரா வயிறுகள் வீதியோரம்
இனம்வாதம் விதைத்துதோர்தல்நேரம்
சிறுபான்மை நசுக்கி ஆசணம்
ஏறியபெ௫ம்பான்மைத் தலைமை

பொங்கித் தழும்புது சினங்கள்
வேதனையின் கடும் சொற்கள்
புளுங்கித் தள்ளுது மனங்கள்
போராட்டமே தினம் தினம்
வீதியோர நிலைகள்

அள்ளிறெறிந்த நிலையிலும்
அடம்பிடிக்கும் அதிபர்
பாழாய்ப்போனது நாடு
அன்றாடத்தேவை இழந்தது வீடு

நித்தமும் தவிக்கு எம் ௨றவு
நிம்மதி இழந்தது ஈழத்தீவு
வாக்கிலேயே மிதந்தவை
பரம்பரை ஆட்சி இப்போ
சிந்திக்க வைத்தவை

நன்றி