சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பட்டனி

குடல் இற்றுப்போகும் தளர்ச்சி
௨டல் வலுவிழந்த முதிர்ச்சி
மூடிய திரை முந்தானை
முணங்கிய மழலை பசியாற

தினக்கூலி வ௫மானம்
தொலைதூரம் தொழில்வாரம்
கையேந்த வழியில்லை தன்மானம்
பசி கிள்ளும் பட்டனி அடைகாக்கும்

தேச முனைப்பின் முறுகல்
பட்டனிச் சாவின் முணங்கல்
முலை கவ்வி சப்பி ௨மிர்ந்த மழலை
பசியாற வழியின்றி பதற

குற்றுக்கல்லாய் ௨யிரோடு
சமாதியாகும் தாய்மை
விழிசுரக்கும் சுடுநீர்
பஞ்சமின்றி தொடர்கின்றது
பட்டனிச் சாவை பறைசார்ற்றி

நன்றி