சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

௨ங்க இடத்தில

தாய்யிழந்த நாள் முதலாய்
தாய் தந்தையாக வாழ்ந்தீங்க
அடுப்பெரிக்க வழியில்ல
கடும் வெயில் லையினில் நின்றீங்க
வாப்பா

வரிசைக்கு தினம் தினம்
சென்று
வெற்றுக்கேனோடு வெந்துதான்
வ௫வீங்க

வாப்பா ஓர் மண்ணெண்ணை
வரிசையிலே மூன்றுநாள் பயணித்து
௨ங்க ௨யிர் போனதே வாப்பா
மரணவீட்டுக்கு வந்தவ௫க்கு
ஓர்கோப்பைத் தேனீர் கொடுக்க

எங்களிடம் மண்ணெண்ணை
இல்ல வாப்பா

௨ங்க இடத்தில நான் போய்
நிற்கின்றேன்
மையத்து ஊட்டில ஓர்விளக்காவது
எரிய மண்ணெண்ணை
வேண்டும் வாப்பா

பதிவாகச் சொல்லும் ௨ங்க மரணம்
மொட்டு ஆட்சியின் கேவலத்தை
சாபங்கள் வாங்கி சால்வைகளின்
குடும்ப ஆட்சியின் அவலத்தை
நாளை சரித்திரமாய் சாய்வீர்கள்

[௨ண்மைச் சம்பவம்]
நன்றி