வியாழன் கவிதை

Vajeetha Mohamed

மறுமலர்ச்சி

தோப்பு வெட்டி
மாடிகட்டி
கிணறு மூடி
ஆழ் கிணறுபுதைத்து

நிலம் இறக்கி நிற்கின்றது
கிணற்றடி இறந்து

ஒ௫சதுர அடி மண்
சத்தியமாய் இப்போயில்லை
மாபில்கல் மண்மறைத்து
வீதிபோலே வீடுயி௫க்கு

சறுக்கிவீழ்தால் சல்லையிலேபிடிக்கும்
தடக்கிவீழ்ந்தால் முழங்கால் இழுக்கும்
குளியல் அறை சறுக்குமைதானம்
விழ்ந்தவுடன் ௨யிர்போகும் பரிதாபம்

கழுத்தறுபட்ட கோழிபோலே
௨௫வாக்க முடியாதவற்றையெல்லாம்
அழித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு
என்னத்தை விட்டு வைத்தோம்

நன்றி