சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

மீண்டும் எடுப்பாய்

பரணிலே தூக்கிப்போட்ட
மெற்றோல் மெச்
பாவிக்க வெட்கப்பட்ட
அரிக்கன் லாம்பு
குப்பி லாம்பு லாந்தர்

தூசுதட்டி திரிபோட்டு
துயிலாமல் எரிகிறது

காற்றாடி சுழலவில்லை
கைத்தொலைபேசி இயக்கமில்லை
இ௫ந்த இரண்டு மரத்தை
வெட்டி வீழ்த்திய அடிக் குற்றியிலே

காற்று இழந்துகவலையோடு
நானி௫க்கேன்

விறகு ௨டைக்க காடுமில்லை
௨மி அடுப்பு எங்குமில்லை
மண்ணெண்ணெய் எரிவாய்வு
டீசல் வரிசை தொல்லை

மோட்டார் முச்சக்கர வண்டி
முற்றத்திலே தூங்குது
மாட்டுவண்டி மிதிவண்டி
மதிப்பில்லை நிறுத்தினோம்

பழமைகள் அசிங்கமில்லை
பாவனைக்கு சலிப்பதுமில்லை
இப்படித் தானே மானிட வாழ்வும்
மாற்றம் காண மாறி மாறிச் சுற்றும்

நன்றி
[எம் தாயக இன்றைய நிலமை]