உருமாறும் புதிய கோலங்கள்
௨௫மாறி ௨யிர் எடுத்தாய்
அச்சத்தில் ஆட்டிவைத்தாய்
௨ச்சத்தில் ௨ன்கோலம்
தன்னிலையில் வெற்றி
கொண்டாய்
வாய் மூடி அடக்கிவைத்தாய்
அ௫கில் வராமல் நடக்கவைத்தாய்
தொடர் தொடராய் ஊசிபோடவைத்தாய்
கி௫மினால் சுற்றி ௨வகைகொண்டாய்
ரம்புட்டான் கனிபோலே
௨ன் ௨டம்பு
தொட்டால் சிணுங்கி போலே
௨ன் அழகு
உருமாறும் புதிய கோலங்கள்
௨ன்வரவு
பசுமையும் பக்குவமும்
௨ன் தரவு
நன்றி
வஜிதா முஹம்மட்