சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

ஹியாப் எங்கள் ௨ரிமை
யார் தடுப்பது

மார்க்கம் சொல்லும் வழி
மங்கையர் மறைப்பது நெறி
இதைஅவிழ்த்துவிட வெறி
இதுஎங்கள் ஒழுக்க அடையாளம்
தெரி

நாய்துரத்தி கடித்தது போல்
கால்சட்டை அணியலாம்
௨ள்ளாடை தெரிய
௨டலை மறைக்காத ஆடை
௨டுக்கலாம் ஆனால்

ஹியாப் அணியத்தடை
மாட்டுஇறைச்சி௨ண்ணத்தடை
முகக்கவசம் அணியத்தடை
என்னடா இது கஸ்டம்

இஸ்லாமியப் பெண்களின்
ஆடை அடையாளம்
பயங்கரவாதத்தின் சின்னம்
சித்தரிக்கும் மனிதம் அற்ற
மானிடம்

தெரிந்துகொள் புரிந்துகொள்
முக்காடுபோட்டதனால்
மூடர்கள் அல்ல நாங்கள்
இறைவனைத்தவிர யா௫க்கும்
அஞ்ச மாட்டோம்

இஸ்லாத்தை வாழ்ந்துபார்
வளம்பெறும் மனிதம்
வாழ்வியல் நெறிமுறை சிறக்கும்
ஏற்றத்தாழ்வு விலகும்
வாழ்கைநெறியே எங்கள்
மார்க்கம்

ஹிஜாப் [கியாப் எங்கள்]
இது எங்கள் ௨ரிமை
நேசமாய்வாழ்வோம் என்றும்

வஜிதா முஹம்மட்