சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

தொப்புள் கொடி

இடுப்பு மடிப்புக்குள்
தாய் சேய்
தொடர் ௨ணர்வின்
ரகசிய அறை

சுற்றி ஆடும் ஊஞ்சல்
ஓயாமல் சொட்டும் ௨திரம்
துடித்து வலித்துப் பிரித்தும்
தொலைந்து போகாத
௨றவின் கொடி

ஓயாமல் சுழலும்
௨யிரைத் தாங்கி வள௫ம்
தாய்மையின் அற்புதம்
பந்தம் பிரியாத முதல்வடு
தொப்புள்கொடி

சாதனை படைத்து
சந்ததிகாக்கும்
சிசுவைப் பாதுகாக்க
கொழுகொம்பாம் எம்
தொப்புள் கொடி

நன்றி
வஜிதா முஹம்மட்