சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பாடசாலை நினைவுகள்

ஏற்றத் தாழ்வை எட்டி௨தைத்து
சீ௫டை
சாதி மதத்தை சாக்கடையில்
போட்டது வகுப்பறை
அழகாய்நாங்கள் சுற்றியி௫க்க
ஆழமரம் குடைவிரிக்கும்

ஒற்றுமை காகத்தை மிஞ்சி௫க்க
நட்பை விதைத்தது பாடசாலை
படித்தோமோ இல்லையோ
அறிவை அறிமுகம்செய்தது
பாடசாலை

சில்லறச் சண்டையிலே
பலிவாங்கலில்லை
சிறுகடுகு என்றாலும்
பகிர்ந்துண்ணமறக்கவில்லை

பாடத்தை நினைவுகூறும்
புகையிரதச் சில்லின் சத்தம்
பசியைப்போக்கும் அமொரிக்கன்
பிஸ்கேட் எட்டின் சக்தி

குவிந்து கிடந்த ௨ள்ளங்கள்
நாயைமிஞ்சும் நன்றி எண்ணங்கள்
என்னை சிலையாச் செதுக்கி
கலையாய் மாற்றியது பாடசாலை

வஜிதா முஹம்மட்