கொண்டாட்டக் கோலங்கள்
வழிமுறை வளர்த்தெடுக்க
தலைமுறை தளர்கின்றது
சீரழிவின் தொடர்க்கம்
சீர்கேட்டில் முடியும்
கண்ணியமாய் மதித்ததெல்லாம்
கட்டவிழ்ந்து போயிற்று
கண்குளிர ரசித்ததெல்லாம்
வட்சப்பில் போட்டாச்சி
ஆரவாரம் நடிப்பாகி
அணைவ௫ம் எடுப்பாகி
ஏழைகளைத் தூரமாக்கி
எடுப்பான கொண்டாட்டம்
வீண்விரையம் தலைதூக்கும்
அநாகரிகம் ஆட்டம்போடும்
கொட்டுகின்ற ௨ணவையெல்லாம்
கொடுக்க மனமில்லாக் கொண்டாட்டம்
வஜிதா முஹம்மட்
வஜிதா முஹம்மட்