“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [06] for 10.04.2022:
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
வடிவங்கள் / Shapes :-
Circle / வ__டம்
Semi Circle / அ__வட்டம்
Triangle / முக்கோ__ம்
Square / ச__ரம்
Oval / நீ__வட்டம்
Rectangle / செ__வகம்
Heart / இ__யம்
Star / ந__சத்திரம்
Pentagon / ஐ__கோணம்
Pyramid / நாற்__ணம்
Cube – Box / பெ__டி
Cone / கூ__பு
Cylinder / உரு__டை
********
OVP Club: Level 2 Topic[26] for 10.04.2022:
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
இவற்றைப் பெற நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
Write in Tamil :-
1] Paper. 2] Book. 3] Pen. 4] Radio. 5] Television.
********
OVP Club: Level 3 Topic [46] for 10.04.2022:
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
இவற்றைப் பெற நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
8] நீந்த பழக்க..?
9] தபால் அனுப்ப..?
10] பறவைகள் / விலங்குகள் பார்க்க..?
11] வெளியில் சென்று உணவு உண்ண..?
12] காற்று வாங்கி, பட்டம் விட..?
13] மேடை நிகழ்ச்சிகள் பார்க்க..?
14] மாலை வேளையில் ஓய்வாக பொழுதைக்கழிக்க..?
15] முன்னைய வரலாற்று பொருட்கள் பார்க்க..?
* *
OVP Club: Level 4 Topic [66] for 10.04.2022:
5 தமிழ் பழமொழிகள் Proverbs அறிந்து எழுதுங்கள்.
அதி ஒன்றின் விளக்கம் தாருங்கள்..!
சத்தமாக படித்து .!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
தீராக் கோபம் போராய் முடியும்.
******
OVP Club: Level 5, Topic [86] for 10.04.2022:
April 7th ‘World Health Day’ ‘உலக சுகாதார தினம்’
இந்த நாளைப்பற்றி தேடி அறிந்து, விபரங்களை
150 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!
******
OVP Club: Level 6 , Topic [106 & [126] for 10.04.2022:
கீழ்வரும் 160 சொற்கள் கொண்ட கட்டுரையை (Article)
வாசித்து விளங்கி, அதனை 150 சொற்களுக்கு குறையாமல்
ஆங்கிலத்தில் எழுதுங்கள்..!
[முக்கிய குறிப்பு: Online Translate பாவிக்காமல்
எழுத முயற்சியுங்கள்].
நான் ஒரு நூலகம் கட்டுரை – 2
மனிதர்களை நல்வழிப்படுத்துவதிலும், மாணவர்களின் அறிவை வளர்ப்பதிலும் நூல்களின் பங்கு அளப்பரியதாகும். நூல்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்களாக விளங்குகின்றன.
அத்தகைய பெறுமதி வாய்ந்த நூல்களை உள்ளடக்கிய நான் ஒரு நூலகமாவேன். ஊரின் மத்தியில் பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டடத்தில் நான் அமையப் பெற்றுள்ளேன்.
விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான பண்டைய நூல்களையும், நவீன நூல்களையும் கொண்டு மிகப் பெரிய அறிவுக்களஞ்சியமாக விளங்கும் என்னை அனைவரும் வியப்புடன் பார்வையிடுவர்.
ஆர்வத்துடன் என்னிடம் வருவோரிற்கு அவர்களிற்கு தேவைப்படுகின்ற விடயங்களை அள்ளி வழங்குவேன். என்னுள் பல்வேறு வகையான நூல்கள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும்.
தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள், சிறுவர் கதைகள், சிறுகதைகள், பொதுஅறிவு நூல்கள், பாடப் பயிற்சிப்புத்தகங்கள், வரலாற்று மற்றும் சமூக புத்தகங்கள் என பலதரப்பட்ட புத்தகங்களை கொண்டுள்ளேன்.
இதனைத் தவிர மாதந்த மற்றும் வாராந்த பத்திரிகைகளும் என்னுள் அடுக்கப்பட்டருக்கும். தூய்மையாக பாரமரிக்கப்படும் என்னுள் மிகுந்த அமைதி நிலவும்.
நான் அமைந்துள்ள கட்டடச் சுவர்களில் காந்தியடிகள், மகாகவி பாரதியார், திருவள்ளுவர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதோடு, அவர்கள் மொழிந்த நல்வரிகளும் எழுதப்பட்டிருக்கும்.
தளத்தின் கீழ்ப்பகுதியில் வாசகர்கள் அமர்ந்து நூல்களைப் படிப்பதற்கான ஒழுங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். சிறுவர்களும் பெரியவர்கள் அதில் அமர்ந்து இலகுவாக நூல்களை படிப்பதனைக் காணும்போது மகிழ்ச்சியாக உணர்வேன்.
அதுமட்டுமல்லாது அறிவுஜீவிகள் மட்டுமின்றி மெத்தப் படிக்காதவர்களும் என்னை தேடிவரும் போது மிகுந்த மனநிறைவு அடைவேன். மற்றவர்களின் வளர்ச்சியில் உதவுவனாகவும், அனைவருக்கும் பிடித்த இடமாக நான் விளங்குவதையிட்டு பெருமையுடன் வாழ்ந்து வருகின்றேன்.
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.