25.04.24
கவி இலக்கம் -313
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே
ஊட்டும் கல்வி உயிரூட்ட
காட்டும் கனிவு பயிரூட்ட
தீட்டும் குழந்தைகளே !
பேரோடு பாராட்டும் திறனின்
மேன்மை பொங்கட்டுமே
வாட்டும் வதைகள் வீழ்த்திட
கூட்டும் கலகலப்பும் குதூகலமும்
தேட்டும் அறிவும்,ஆற்றலும்
பல்கிப் பெருகி அழகாய்ப்
பூத்துக் குலுங்கட்டுமே
நாட்டும் நீதி,நேர்மையும்
சூட்டும் பட்டப் படிப்பும்
தீட்டும் உற்றார் துடிப்பும்
எட்டும் பெரியோர் அன்பும்,
மதிப்பும் பெருகட்டுமே
பரவட்டும் பாரினில் நாடெங்கும்
பொழியட்டும் திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே .