வியாழன் கவி 06.01.2022 தவக்குமார்
திறவு கோல்
அன்னையின் மடியின்
திறவு கோல் கண்டு
அகிலம் அதனில்
வரவு கண்டேன்
ஆண்டவன் வரமும்
ஆதாரம் ஆகி
ஆதயம் கொண்டேன்
சிந்தனை தெளிவும்
சீரான பாதையும்
திரவுகோல் ஆன பெற்றோரால்
என் நகர்வுக்கு மூலம் கண்டேன்
பள்ளிக்குருவும் பட்டறி பாடமும்
திறவுகோல் ஆனதால் நல்லது கெட்டதை
தரம் காணும் நாணையம் ஆனேன்
அடுத்த தலைமுறை
விளைச்சலை காண
திறவு கோல் ஆக மகவுகள் கண்டேன்
அன்பும் கருனையும் திறவுகோல் கொண்ட
மனிதனாய் மகிழ்வினில் உள்ளேன்