சந்தம் சிந்தும் கவிதை

Sivajiny Sritharan

சந்த கவி
இலக்கம்_149

“வேள்வி”
உடல் உயிர்
உன்னதமாக
மண்ணுக்கு
மக்களுக்கு
விதையிட்டு
உரமிட்ட
மாவீரர் அர்பணிப்பு!

ரத்த அருவியில்
வீரர்கள் குளித்து
யாகம் தொடங்கி
வேள்வி நடந்தது!

வீரர்கள் சூழ்ந்து
காவலில் நின்று யாக
வேங்கைகள்
மூட்டிய வேள்வியில்
ஆயிரம் வீரர்கள் போயினர்!!

பச்சிளம்
பாலகன்
பாலச்சந்திரன் இனத்திற்கு
இரையாகி
இரத்த கறையில்
கரைந்த காவிய வேள்வி கண்கலங்கிய விழிகள்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்