திரு சிங்கராசா அப்பாப்பிள்ளை

அமரா்

இலங்கையில் அச்சுவேலி கதிரிப்பாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும், தற்போது கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட
திரு சிங்கராசா அப்பாப்பிள்ளை அவர்களிற்கான

ஆத்ம அஞ்சலி

அப்பாப்பிள்ளை இராசம்மா பெற்ற மகன் – அண்ணன்
சிங்கராசா எனும் நாமம் கொண்ட மகன்
பாக்கியவதி அம்மாவின் கணவனிவர் – ஆறு
பிள்ளைகளைப் பெற்றெடுத்த பிதாமகன்.

அண்ணா என்று அழைக்கையிலே புன்சிரிப்பு -உந்தன்
ஆரத்தழுவி அரவணைக்கும் அனுசரிப்பு
சோம்பலுக்குச் சுடக்குப் போடும் சுறுசுறுப்பு – நகைச்
சுவையாகப் பேசும் உங்கள் தமிழ் சிறப்பு.

இத்தனையும் இழந்து நாங்கள் தவிக்கிறோம் அண்ணா – நீ
இறந்துவிட்டாய் என்கிறார்கள் எப்படி அண்ணா?
நோயும்கூட தாயைப்போல பாசம் காட்டியதோ? – நீ
நொந்து அழப் பொறுக்காமல் தூங்குகின்றாயோ?

அழுதழுது ஆறாத மனைவியைப் பாரு
ஆற்றொணாது புலம்புகின்ற அயலட்டம் யாரு?
மக்கள் மரு மக்களொடு பேரன் பேத்தியர்
உனைப் பிரிந்து வாடுவதை வந்து பாரையா.

விதையது விழ்ந்தால் மரமாகும்
மரமது வீழ்ந்தால் உரமாகும்
இரவது வீழ்ந்தால் பகலாகும
உறவது வீழ்ந்தால் நிலை மாறும்
அந்த நினைவாழும் நிழலாகும்.

பிறப்பும் இறப்பும் உருவாக்கம்
உருமாற்றம் நிறைவூக்கம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.

  • 07/01/2023
  • பரம விஸ்வலிங்கம் - ஜெர்மனி
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 year ago

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 year ago

எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மசாந்தி பெற வேண்டுகிறோம்.

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
1 year ago

ஓம் சாந்தி
ஆழ்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன்

Jeya Nadesan
Jeya Nadesan
1 year ago

அமரர் சிங்கராசா அப்பாப்பிள்ளை அவர்களின் பிரிவிற்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்.ஆன்ம ஈடேற்றம் வேண்டி பிரார்த்திப்போம்
                         சாந்தி சாந்தி சாந்தி

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
1 year ago

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி, ஆறுதல்கள் கூறுகின்றோம்.

Last edited 1 year ago by சாந்தினி துரையரங்கன்.
நடா மோகன்
நடா மோகன்
1 year ago

ஆத்மாவின் நித்திய இளைப்பாரலில், உறவுகள் ஆறுதலடைய வேண்டுகின்றோம்..!