சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

சிரிப்பு
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
சிரிப்பு உணர்வுகளின்
இயல்பான வெளிப்பாடாம்

அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
சிரிப்பிலே ஆறுவகையாம்

உடலை வலிமைப்படுத்தி
அகத்தினை தூய்மையாக்கி
மனஅழுத்தத்தை வெளியேற்றி
புத்துணர்வை தூண்டுவதாகும்

மனிதர் மட்டும் இல்லாமல்
மிருகமும் பல்லைக்காட்டி
பயமுறித்தியும் வெளிப்படுத்தும்
ஆற்றலின் படைப்பாகும்