வியாழன் கவிதை

Selvi Nithianandan

புரட்டிப் போட்ட புயல் (593)

பாரத தேசத்திலே
பலத்த காற்றாய்
பாரிய மழையாய்
அரங்கேற்றம் கண்டதே

தொடர்மழை ஒருபுறம்
தொற்றுநோய் மறுபுறம்
தேங்கிய கழிவுநீராய்
தேக்கம் கொண்டதே

உணவுஇல்லா திண்டாட்டம்
உதவிகேட்டு மண்டாட்டம்
அரசியலும் மாறாட்டம்
அடுத்தவேலை போராட்டம்

சிறுவர்முதல் பெரியவர்வரை
வீட்டுக்குள்ளும் நீரிலேமுடக்கம்
வீதிஎது எனதெரியாது
குப்பைகூழமாய் போனதே