வியாழன் கவிதை

Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் (589)

ஒல்லாந்து தேசத்திலே
ஒற்றுமையாய் இணைதிங்கு
ஓளிர்விட பா முகமாய்
ஒலித்த நூலாய் அரங்கேறியதே

பலநாடுகளிலும் பங்கெடுத்து
பார்பதற்க்கும் வியப்பாய்
பாக்களை பிரித்தெடுத்து
பரவச ஆய்வாய் நிகழவே

என்பயணங்களும் அதன்பாடங்களும்
என்றதொகுப்பும் வெளியாக்கமாய்
எண்ணற்ற வலிகளின் படைப்பாய்
எண்திசையும் மெருகேறிச் சென்றதே

வெற்றியில் மலராய் இணைவும்
வியந்திட கவிஅட்டையின் சேர்வும்
விருட்சமாய் பாக்களின் கோர்வையும்
வாழிய உம்புகழ் பாரெங்குமே